கெமிஸ்ட்ரி! எங்களை ஏன் தப்பா பேசுறீங்க? பொங்கி எழுந்த லலித் மோடி.. சுஷ்மிதா சென் பற்றி பேச்சு
டெல்லி: ஐபிஎல் போட்டியை அறிமுகம் செய்தவரும் அதன் முன்னாள் தலைவருமான லலித் மோடிக்கும் முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னுக்கும் இடையேயான நட்பு குறித்த சர்ச்சைகள் மேலெழுந்துள்ள நிலையில் இது குறித்த விமர்சிப்பவர்களுக்கு நடிகர் அஜித் பாணியில் சமூக வலைத்தளங்களில் லலித் மோடி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு நீண்ட குறிப்பையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
தனது முன்னாள் மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லலித் மோடி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

என்ன சொன்னார்?
"சமூக வலைத்தளங்களில் ஏன் என்னை பற்றி தவறாக சித்தரிக்கப்படுகிறது என தெரியவில்லை. தெரிந்தால் யாராவது விளக்குங்கள். நான் இன்ஸ்டாவில் சில படங்களை மட்டுமே பதிவிட்டேன். இதற்காக நான் ஏன் விமர்சிக்கப்படுகிறேன்? இப்போது நாங்கள் (சுஷ்மிதா சென்) இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். ஒருவேளை இருவருக்குமிடையேயான புரிதல் நேர்மறையானதாக இருப்பின் எங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனால் அதிசயம் நிகழலாம்.

சுஷ்மிதா சென்
இதற்கிடையில் இவ்வாறான விமர்சனங்கள் தேவையற்றது. நீங்கள் 'வாழுங்கள் மற்றும் மற்றவரை வாழவிடுங்கள்' இதுதான் என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை. சமூக வலைத்தளத்தில் எழுதும் நீங்கள், டொனால்ட் டிரம்ப் போல தவறான செய்தியை எழுதாதீர்கள். சிலர் என் தோழியை என் அம்மாவின் தோழி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது தவறான தகவல். இது ஒரு வதந்தி. அதேபோல என்னை நீங்கள் நாட்டைவிட்டு தப்பியோடியவன் என்று குறிப்பிடுகிறீர்கள்.

கெமிஸ்ட்ரி
நீதிமன்றம் எப்போது என்னை குற்றவாளி என்று அடையாளப்படுத்தியது என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும். இந்தியாவில் தொழில் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல" என்றும் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகள் குறித்தும் சில வரிகளை அவர் எழுதியுள்ளார். முன்னதாக லலித் மோடி இன்ஸ்டாவில், சுஷ்மிதா சென் தன்னுள் பாதி என்றும், தான் இன்னும் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை எனவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

வீடியோ
இதனைத் தொடர்ந்து சுஷ்மிதா சென்னும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, மோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை ஆனால் நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications