பில்கிஸ் பானு கேஸ்:11 பேர் விடுதலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கை கோர்த்த இடதுசாரிகள்-மமதா கட்சி!
டெல்லி: குஜராத்தில் 2002-ம் ஆண்டு பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது குடும்பத்தினர் 14 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், அரசியலில் பரம வைரிகளான இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸும் இணைந்து அப்பீல் செய்துள்ளனர்.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் இந்து சாமியார்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் இந்து-முஸ்லிம் மத வன்முறை வெடித்தது. அப்போது குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார்.

2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த கொடூர சம்பவங்களில் ஒன்றுதான் பில்கிஸ் பானு என்கிற கர்ப்பிணி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது. பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம், குடும்பத்தினர் படுகொலை வழக்கில் 2008-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த கொடூர குற்றச்செயல் புரிந்த 11 பேருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த நிலையில் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி குற்றவாளிகள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதனை கருத்திக் கொள்ள வேண்டும் என குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து 11 பேர் விடுதலை தொடர்பாக குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். கோத்ரா சிறையில் இருந்து ஆகஸ்ட் 15-ந் தேதி 11 குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றவாளிகளுக்கு அளிக்க வரவேற்பும் தெரிவிக்கப்பட்ட ஆதரவு கருத்துகளும் கடும் சர்ச்சையாகின. இந்த 11 பேர் விடுதலைக்கு பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் சுபாஷினி அலி, ரேவதி லவுல், ரூப் ரேகா வர்மா ஆகியோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இவர்களில் சுபாஷினி அலி யார் தெரியுமா? மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் AIDWA எனப்படும் சிபிஎம்-ன் மகளிர் அமைப்பின் துணைத் தலைவர்தான் சுபாஷினி அலி. இதே போல இன்னொருவரும் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் மஹூவா மொய்த்ரா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ராவின் பேச்சுகள் நாடாளுமன்றத்தை அதிரவைத்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்க அரசியலில் பரம வைரிகளாக இருப்பவை சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள். ஆனால் பில்கிஸ் பானு வழக்கில் கை கோர்த்து இரு கட்சிகளும் மேல்முறையீடு செய்திருப்பது அரசியல் அரங்கத்தில் ஹாட் டாப்பிக்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications