அண்ணன்டா! தம்பிடா! பாஜகவுக்கு முழுக்கு போட்டு காங்கிரஸில் ராகுலுடன் கை கோர்க்கிறார் வருண் காந்தி?
டெல்லி: பாஜக எம்பியாக இருந்து கொண்டே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை மிக கடுமையாக விமர்சித்து வருபவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண் காந்தி. இத்தகைய விமர்சனங்களைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அல்லது ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் போது வருண் காந்தி, காங்கிரஸில் இணையக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு 2 மகன்கள். மூத்தவர் ராஜீவ் காந்தி; இளையவர் சஞ்சய் காந்தி. இந்திரா காந்தி அம்மையார் தமது அரசியல் வாரிசாக இளையவர் சஞ்சய் காந்தியை வளர்த்தெடுத்தார். இந்திய ஜனநாயகத்தின் துயரம் தோய்ந்த கறுப்பு நாட்களான எமர்ஜென்சிக்கு சூத்திரதாரியாக இருந்தவர் சஞ்சய் காந்தி. ஆனால் காலம் சஞ்சய் காந்தியை அழைத்துக் கொண்டது. 1980-ல் விமான விபத்து ஒன்றில் சஞ்சய் காந்தி காலமானார்.

இதனைத் தொடர்ந்து இந்திராவின் ஒரே அரசியல் வாரிசாக இருந்தவர் மூத்தவர் ராஜீவ் காந்தி. இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பிரதமரானார் ராஜீவ் காந்தி. இன்னொரு பக்கம், இளையவர் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி, அவரது மகன் வருண் காந்தி ஆகியோருக்கும் மூத்தவர் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கும் மனக்கசப்பு ஏற்பட குடும்பம் பிரிந்தது. பின்னர் மேனகா காந்தியும் வருண் காந்தியும் பாஜகவில் இணைந்தனர். மேனகா காந்தி மத்திய அமைச்சராகவும் இருந்தார். வருண் காந்தி எம்பியானார். ஆனால் இப்போது மேனகா காந்திக்கு பாஜகவில் எதிர்காலம் இல்லை; வருண் காந்திக்கும் பாஜகவில் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக இல்லை. 1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காங்கிரஸின் முகங்களாக உள்ளன.
இப்போது பாஜக எம்பியாக இருந்த போதும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் வருண் காந்தி. இன்னமும் வருண் காந்தி மீது பாஜக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. அண்மையில் டெல்லி செங்கோட்டை அரு9கே பாதயாத்திரையை ஒட்டிய பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மக்களிடையே பாஜக இந்து- முஸ்லிம் என பிளவுபடுத்தி வைத்திருப்பதை சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்திருந்தார். ராகுலின் இந்த குரலிலேயே அவரது சித்தப்பா மகனாகிய சகோதரர் வருண் காந்தியும் சில கருத்துகளை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது. அத்துடன் நேரு குடும்பத்துக்கு எதிராக தாம் ஒருபோதும் விமர்சித்தது இல்லை எனவும் கூறியிருந்தார். இதனால் ராகுல் காந்தியுடன் வருண் காந்தி கை கோர்க்கவும் காங்கிரசில் இணையவும் திட்டமிட்டுள்ளாரா? என்கிற யூகங்கள் எழுந்தன.

இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் கேள்வியும் கேட்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தியோ, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேதான் இதனை முடிவு செய்யவேண்டும். இருந்தபோதும் அவர் பாஜகவில் இருந்து வருகிறாரே.. என்கிற தயக்கத்தை மட்டும் வெளிப்படுத்தி இருந்தார். ராகுல் காந்தியின் 2-ம் கட்ட பாதயாத்திரை மேற்கு உபி வழியாக செல்கிறது. இந்த யாத்திரையின் போது ராகுல் காந்தியை வருண் காந்தி சந்தித்து ஆதரவு தெரிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்?












Click it and Unblock the Notifications