டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Maha Cyclone: "மஹா"வை வைத்து மெகா திட்டம்.. டெல்லிவாசிகளின் எதிர்பார்ப்பு இதுதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியிலிருந்து பரவும் காற்று மாசு.. என்ன காரணம்?- வெதர்மேன் விளக்கம்

    டெல்லி: டெல்லியில் காற்று மாசை தணிக்க மஹா புயல் உதவுமா என்ற எதிர்பார்ப்பு டெல்லிவாசிகளிடம் ஏற்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு சாலைகளில் புகைமூட்டமாக காணப்படுகிறது. காற்று மாசால் 8 இடங்களில் சுவாசிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் நாளை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காற்று மாசால் புகை மூட்டம் ஏற்பட்டு சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்களும் எதிரே வரும் வாகனங்களும் தெரியாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. ரயில்களும் விமானங்களும் தாமதமாக வருகை தந்தன.

    மஹா புயல் திடீர் யூ டர்ன்.. குஜராத்தில் கரையை கடக்குமாம்.. 100 முதல் 120 கிமீ வரை காற்றும் வீசும்!மஹா புயல் திடீர் யூ டர்ன்.. குஜராத்தில் கரையை கடக்குமாம்.. 100 முதல் 120 கிமீ வரை காற்றும் வீசும்!

    வாகன கட்டுப்பாட்டு

    வாகன கட்டுப்பாட்டு

    இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 500 முதல் 600 வரை காற்று மாசு தர குறியீடு உள்ளது. இதை குறைக்க இன்று முதல் வாகன கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.

    மழை

    மழை

    ஒற்றைப்படை எண், இரட்டை படை எண் என்ற அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. காற்று மாசால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில் மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு என்ற நிலை உள்ளது.

    இந்திய வானிலை மையம்

    இந்திய வானிலை மையம்

    கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான மஹா புயல், நேற்று காலையில் டையூவில் இருந்து தென்மேற்கே 580 கி.மீ. தொலைவிலும், வெரவலில் இருந்து 550 கி.மீ. தென்மேற்கிலும் மையம் கொண்டு இருந்தது. ஆனால் இது திடீரென திசை மாறி இன்று குஜராத் கடற்கரையை நோக்கி திரும்பும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.

    மழை பெய்யுமா

    மழை பெய்யுமா

    இந்த புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத்தில் 7-ஆம் தேதி கரையை கடக்கும். இதன் தாக்கத்தால் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் மழை பெய்தால் காற்று மாசுவிலிருந்து மக்கள் விடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Maha Cyclone is the only problem for polluted air in Delhi, as the cyclone crosses near Gujarat. People expects this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X