அடுத்து என்ன? குடியரசுத் தலைவர் ஆட்சியா? முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மகாராஷ்டிரா ஆளுநர்!
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகிவிட்டதால் தற்போது அங்கு ஆளுநர் என்ன முடிவை எடுப்பார் என்று கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகிவிட்டதால் தற்போது அங்கு ஆளுநர் என்ன முடிவை எடுப்பார் என்று கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.
அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அங்கு சிவசேனாவுடன் நடந்த மோதலால் தற்போது பாஜக அரசு தனது அமைச்சரவையை கலைத்துள்ளது.

இல்லை
மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றதால், அந்த கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவசேனா தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டது. முதல்வர் பதவி இரண்டரை ஆண்டுகளுக்கு வேண்டும் என்று சிவசேனா கேட்டது.

தொடர் சண்டை
இதற்கு பாஜக ஒப்புக்கொள்ளாமல் இருந்தது. இதனால் பாஜக சிவசேனா இடையே பிரச்சனை உருவானது. இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை எல்லாம் தோல்வியில் முடிந்தது. பாஜக கண்டிப்பாக முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சிவசேனா உறுதியாக இருந்தது.

என்ன திருப்பம்
இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக மகாராஷ்டிராவில் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகி உள்ளார். நாளையோடு அவரின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் ராஜினாமா செய்தார். அதோடு மகாராஷ்டிராவில் மொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளது.

முடிவு எடுப்பார்
இந்த நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் காபந்து முதல்வராகவும் நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். அங்கு கூட்டணியை கைகூடவில்லை. அதனால் தற்போது மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் என்ன முடிவு எடுப்பார் என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதிக இடங்களை வென்ற தனி கட்சி என்று பாஜகவை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க சொல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவசரம்
இல்லையென்றால் நேரடியாக குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இன்னும் சில தினங்களில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதனால் பெரும்பாலும் அதற்கு முன் அம்மாநில ஆளுநர் பகத் சிங் முக்கிய முடிவை எடுப்பார் என்று கூறுகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications