டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் உறுதியான நபர் பலி.. யார் அவர்? என்ன நடந்தது.. வெளியான பரபர தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிராவில் ஒருவர் ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அந்த நபர் யார், எப்படி உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டது. நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் 2 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

அடாவடி சீனா.. அருணாசல பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன மொழி பெயர் பலகைகள்.. இந்தியா பதிலடிஅடாவடி சீனா.. அருணாசல பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன மொழி பெயர் பலகைகள்.. இந்தியா பதிலடி

 ஓமிக்ரான் பாதிப்பு

ஓமிக்ரான் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை சுமார் 1100க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், நேற்றைய தினம் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்களிலும் ஓமிக்ரான் பாதிப்பு உறுதியானது. இந்த 2 மாநிலங்களிலும் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதியானது. இந்தியாவில் இதுவரை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

 எந்த மாநிலங்கள்

எந்த மாநிலங்கள்

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் அதிக பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2 மாநிலங்களில் ஏற்கனவே 250க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல குஜதார், கேரளா, தெலங்கானா மாநிலங்களிலும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், ஓமிக்ரான் உறுதியான ஒருவர் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 முதல் உயிரிழப்பு

முதல் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் பிம்ப்ரி சின்ச்வாட் நகரைச் சேர்ந்த 52 வயது நபருக்குச் சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் நைஜீரியாவில் இருந்து சமீபத்தில் திரும்பியவர் என்பதால் அவரது மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவருக்கு ஓமிக்ரான் உறுதியானது. இந்நிலையில், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்தியாவில் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்ட நபர் உயிரிழப்பது முதல்முறையாகும்.

 இருவேறு கருத்து

இருவேறு கருத்து

அதேநேரம் இதை முதல் ஓமிக்ரான் உயிரிழப்பு எனக் கூற முடியாது என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் கூட, அவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்றும் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததால் இதை ஓமிக்ரான் உயிரிழப்பு என்ற கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், கொரோனா உறுதியான பின்னரே அவர் உயிரிழந்ததால், அதை கொரோனா உயிரிழப்பாகவே கருத முடியும் என மும்பை சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

Recommended Video

    புதுச்சேரியில் முதல் முறை.. இருவருக்கு ஓமைக்ரான்: சர்ச்சையாக மாறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!
     சமூக பரவல்?

    சமூக பரவல்?

    மகாராஷ்டிராவில் உறுதி செய்யப்பட்ட வழக்குகளில் சுமார் 46% பேர் எந்தவொரு வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொள்ளாதவர்கள். அதேபோல டெல்லியிலும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாத 25 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா உறுதியாகும் அதிகப்படியான பேருக்கு ஓமிக்ரான் உறுதியாவதால் இது சுகாதார பரவலாக மாறியிருக்கலாம் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் எச்சரித்துள்ளார்.

    English summary
    Maharashtra confirmed the presence of Omicron in a 52-year-old man who recently died of heart attack in Pimpri Chinchwad. Omciron deaths across India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X