மழைக்கால கூட்டத்தொடரை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்! எம்பிக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல நாடாளுமன்ற கூட்டத்தொடரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கடைசி கூட்டம் இது என்பதால் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, கூட்டத்தொடர் தொடங்கும் 18ம் தேதியான இன்று புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என அனைத்து எம்பிக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இக்கூட்டத்தொடரில் மத்திய அரசு 24 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. அதேபோல எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை அக்னிபாத், திட்டம், பணவீக்க விகிதம், மகாராஷ்டிரா ஆட்சிக் கவிழ்ப்பு, நாடாளுமன்றத்தில் பல்வேறு தடைகள் உள்ளிட்டவைகளை எழுப்ப உள்ளன. இதனால் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கூட்டத்தொடரை அமைதியாக நடத்த மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ஆர்எல்டி எம்பி ஜெயந்த் சவுத்ரி, திமுகவின் திருச்சி சிவா, அதிமுகவின் தம்பிதுரை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் விஜயசாய் ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய், அப்னா தள் எம்பி அனுபிரியா படேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் பட்டியலை நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டிருந்தது. அதில் வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலைக் கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரெளடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் உள்ளிட்ட வார்த்தைகளை குறிப்பிட்டு இவைகளை நாடாளுமன்ற இரு அவைகளிலும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. மீறி பயன்படுத்தினால் இந்த வார்த்தைகள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடைமுறைக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் மற்றொரு அறிவிப்பு வெளியானது. அதன்படி சபாநாயகர் அனுமதியின்றி அவைக்குள் பதாகைகள், துண்டு பிரசுரங்கள், பத்திரிகை குறிப்புகள் போன்றவற்றை கொண்டு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே குறிப்பிட்ட வார்த்தைகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், தர்ணா மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துண்டு பிரசுரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக வெளிவந்துள்ள அறிவிப்பானது எதிர்க்கட்சியினருக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.
இப்படியான நிலையில் பிரதமர் மோடி மேற்குறிப்பிட்ட வேண்டுகோளை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications