புதுச்சேரிக்கு அனுப்பப்படும் அதிமுக எம்எல்ஏ-க்கள்.. வேலையை தொடங்கிய எடப்பாடி.. என்ன நடக்குது?
சென்னை: திமுக மற்றும் அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கும் சூழலில், அதிமுக எம்எல்ஏ-க்களை புதுச்சேரியில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது. ஆனால் தவெக ஆட்சியமைக்க 6 எம்எல்ஏ-க்களின் தேவை இருக்கிறது.

இதனால் விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியுள்ளார். அதுதொடர்பாக நாளை விசிக பரிசீலனை செய்யவிருந்த சூழலில், திடீரென எம்எல்ஏ-க்கள் உடனான ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சிபிஎம் கட்சியும் ஆதரவு கொடுக்கும் மனநிலையில் இல்லை. இப்படியான சூழலில், திடீரென திமுக - அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.
இதனிடையே விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளார். ஆனால் ஆளுநர் தரப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், ஆட்சி அமைப்பது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக இடையில் 2ஆம் கட்டத் தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க உள்ளதாகவும், அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அமைச்சரவையில் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, தேமுதிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளை சேர்க்கவும் பேசி வருவதாக விவரம் அறிந்த சிலர் பேசத் தொடங்கியுள்ளனர். இது நடைமுறையில் சாத்தியப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக எம்எல்ஏ-க்கள் சந்தித்திருக்கும் சூழலில், திடீரென அவர்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கூவத்தூரில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். இதனிடையே ஆளுநரும் பதவியேற்பை தாமதம் செய்வது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம்











Click it and Unblock the Notifications