மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி.. டெல்லியில் பிரதமர் மோடியை முறைப்படி அழைத்த தமிழக அரசு
டெல்லி: சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் மாமல்லபுரத்தில் ஜூலை 28 ல் துவங்கி நடைபெற உள்ளது. இதன் துவக்க விழாவில் பங்கேற்க வரும்படி தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டவர்கள் அழைப்பு விடுத்தனர்.
சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இதுவரை 43 முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்திருந்தாலும் கூட அதில் ஒன்று கூட இந்தியாவில் நடைபெறவில்லை.
இந்தியாவில் முதல் முறையாக இந்த ஆண்டுதான் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. அதுவும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடக்கிறது.

ஜூலை 28 முதல் துவக்கம்
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை நடக்கின்றன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் அனைவரின் பார்வையும் தமிழகத்தை நோக்கி திரும்பியுள்ளது. இதற்கிடையே தான் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதால் அதனை சிறப்பாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை மனதில் கொண்டு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அரங்குகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் நேப்பியர் பாலமும் செஸ் விளையாட்டு கட்டங்கள் போன்று கருப்பு, வெள்ளை நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேரு அரங்கில் துவக்க விழா
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28 ல் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதாக இருந்தது. ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளதால் தமிழக அரசு சார்பிலான குழு ஒன்று பிரதமர் மோடியை சந்தித்து நேரில் அழைப்பு விடுக்கும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தன்னிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு
அதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவுக்கு பிரதமர் மோடியை தமிழ்நாடு குழு ஒன்று இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications