Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு ’ஸ்கெட்ச்’.. துணை சபாநாயகராகும் அயோத்தி எம்பி? மம்தா பரிந்துரையின் பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபாவின் துணை சபாநாயகர் பொறுப்புக்கு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் உள்ள தொகுதியான பைசாபாத்தில் வென்ற சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சி பரிந்துரைத்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த பரிந்துரையின் பின்னணியில் பாஜகவுக்கு செக் வைக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ள பின்னணியும் வெளியாகி உள்ளது.

மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் என்பது நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் மத்தியில் தனித்து ஆட்சியை பிடிப்பதற்கான 272 இடங்கள் கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறிய பாஜக தனது கூட்டணி கட்சிகளின் 53 எம்பிக்களின் ஆதரவில் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. மீண்டும் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ளார்.

deputy speaker

இதையடுத்து லோக்சபா சபாநாயகர் தேர்தல் ஜுன் 26ல் நடத்தப்பட்டது. இதில் பாஜக கூட்டணி வேட்பாளராக ஓம்பிர்லா வெற்றி பெற்றார். குரல் வாக்கெடுப்பின் மூலம் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளரான கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சுரேசை அவர் வீழ்த்தினார். இதில் ஓம்பிர்லாவுக்கு 297 எம்பிக்களின் ஆதரவும், சுரேசுக்கு 232 எம்பிக்களின் ஆதரவு கிடைத்தது.

இதையடுத்து லோக்சபா சபாநாயகராக மீண்டும் ஓம்பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2019 முதல் 2024 வரை ஏற்கனவே 5 ஆண்டுகள் சபாநாயகராக இருந்த நிலையில் மீண்டும் அந்த பதவியில் அமர்ந்துள்ளார். இதையடுத்து அடுத்ததாக துணை சபாநாயகர் யார்? என்ற விவாதம் எழுந்துள்ளது. தற்போது வரை லோக்சபா துணை சபாநாயகர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஏனென்றால் கடந்த 2019 -2024 காலத்தில் லோக்சபாவில் சபாநாயகர் பதவி என்பது காலியாக வைக்கப்பட்டது. ஆனால் அப்போது பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் இந்த முறை மத்தியில் பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் நிச்சயம் பாஜக கூட்டணி கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் துணை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி கேட்டுள்ளது. ஆனால் அதனை பாஜக ஏற்கவில்லை. இதனால் லோக்சபா சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம்பிர்லாவை எதிர்த்து காங்கிரஸ் எம்பியான சுரேசை களமிறக்கப்பட்டார். இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலை உள்ளடக்கிய பைசாபாத் லோக்சபா தொகுதியின் சமாஜ்வாதி கட்சியின் எம்பியான அவதேஷ் பிரசாத்துக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதாவது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் இந்த பரிந்துரையை செய்துள்ளது. துணை சபாநாயகர் பதவியை அயோத்தி ராமர் கோவிலை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் வென்ற சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் எம்பிக்கு வழங்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் கட்சி சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத்தை சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைப்பதன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

அதாவது அயோத்தி சட்டசபை தொகுதி மற்றும் ராமர் கோவிலை உள்ளடக்கிய பைசாபாத் லோக்சபா தொகுதியில் வென்ற சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இதன்மூலம் தலித் அரசியலை அவர் திரிணாமுல் காங்கிரஸ் முன்னெடுக்க பார்ப்பதாக கூறப்படுகிறது. அதாவது பாஜக அவதேஷ் பிரசாத்துக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்காத பட்சத்தில் அதனை வைத்து ‛தாமரை' கட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்க முடியும். ஒருவேளை துணை சபாநாயகர் பதவியை வழங்கினால் அதனை ‛இந்தியா' கூட்டணிக்கு சாதகமாக பயன்படுத்த முடியும் என மம்தா பானர்ஜி கணக்கிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி லோக்சபாவில் சபாநாயகர் பதவிக்கு ஏறக்குறைய சமமானது தான் துணை சபாநாயகர் பதவி. சபாநாயகர் இல்லாத பட்சத்தில் துணை சபாநாயகர் தான் அவையை வழிநடத்துவார் என்பதால் தான் இந்த பதவியை பெற எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. மேலும் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் பரிந்துரைத்த அவதேஷ் பிரசாத் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் லோக்சபா தொகுதியில் 5,54,289 ஓட்டுகளை பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய சிட்டிங் எம்பியான லாலு சிங் 4,99,722 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் அவதேஷ் பிரசாத் 54,567 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த ஜனவரி மாதம் அயோத்தியில் புதிய ராமர் கோவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோக்சபா தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் பாஜகவுக்கு கைக்கொடுக்கவில்லை. இதனால் தான் ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் லோக்சபா தொகுதியிலேயே பாஜக வேட்பாளர் லாலன் சிங் தோல்வியடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இது கடந்த 2019 தேர்தலை ஒப்பிடும்போது 32 சீட் அதிகமாகும். மாறாக பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது கடந்த 2019 தேர்தலை ஒப்பிடும்போது 29 சீட் குறைவாகும். மேலும் கடந்த 2019ல் ஒரு தொகுதியில் வென்ற காங்கிரஸ் இந்த முறை 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியின் எம்பியாக உள்ளார். அதேபோல் கடந்த முறை 10 தொகுதிகளில் வென்ற மாயாவதியின் பகுஜன் சமாஜ் இந்த முறை ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. மேலும் பாஜக கூட்டணியில் உள்ள ஆர்எல்டி 2 இடங்களிலும், ஏடிஎஸ் ஒரு இடத்திலும் வென்றது. ஏஎஸ்பி (கேஆர்) கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+