டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிங்கு எல்லையில் பதற்றம்: போலீசாரை தாக்கிய விவசாயிகள்... 43 பேர் கைது

Google Oneindia Tamil News

டெல்லி : சிங்கு எல்லை பகுதியில் விவசாயி வாளுடன் வந்த போலீசார் சிலரை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் திட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள், தற்போது டெல்லி - அரியானா இடையேயான சிங்கு எல்லை பகுதி, காசிபூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லி-மீரட் நெடுஞ்சாலையில் அவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அங்கிருந்து கலைந்து செல்லும்படி காசியாபாத் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Man Who Attacked Cop With Sword At Farmers Protest, 43 Others Arrested

இருப்பினும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியதால் அப்பகுதியே போர்களம் போல் காட்சியளித்தது.

இந்த தாக்குதலின் போது விவசாயி ஒருவர் வாளுடன் வந்து போலீசாரை தாக்கி உள்ளார். மேலும் சிலர் வந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர். ஆனால் போலீசார் மீது கற்களை வீசியது போராட்டக்காரர்கள் இல்லை, உள்ளூர்வாசிகள் என கூறப்படுகிறத. இது தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு திரண்டு வந்த போராட்டக்காரர்கள் மற்றம் விவசாய சங்க தலைவர்கள், தாங்கள் நடத்தி வரும் அமைதி போராட்டத்தை அரசு சிதைக்க முயற்சிக்கிறது. இதனால் தங்களின் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை திரட்ட, மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

English summary
The Delhi Police have arrested 43 people, including the man who attacked a police officer on Friday with a sword during clashes at Singhu border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X