மணிப்பூர்: எஸ்டி பட்டியலில் 'மைத்தேயி' இனத்தை சேர்க்க எதிர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
டெல்லி : மணிப்பூர் மாநிலத்தின் மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவு. இது மணிப்பூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அம்மாநிலத்தையே பற்றி எரிய வைத்துள்ளது.
எஸ்டி பட்டியலில் ஏற்கனவே இருக்கும் நாகா, குக்கி இன மக்கள் மைத்தேயி மக்களுக்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. மணிப்பூர் மாநில வரலாற்றில் மிக மோசமான வன்முறையாக இது உருவெடுத்துள்ளது. தற்போது வரை இம்மோதல்களி 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலம் பெரும் பதற்றத்தில் உள்ளது.

மணிப்பூரில் சிக்கி உள்ள பிற மாநிலத்தவரை மீட்க ஒவ்வொரு மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .மணிப்பூரில் மோரே நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களது வீடுகளும் கடைகளும் தீக்கிரையாகி இருக்கின்றன. மணிப்பூரில் பிற மாநிலத்தவரும் மைத்தேயி இனக்குழுவினரும் சொந்த நிலத்து அகதிகளைப் போல வெளியேறுகின்றனர்.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.வும் மணிப்பூர் சட்டசபையில் மலைபிரதேச கமிட்டி தலைவருமான டின்கங்லுங் கங்மேயி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இம்மனுவில், மைத்தேயி இனக்குழு பழங்குடிகளே இல்லை. அப்படி இருக்கையில் எப்படி பழங்குடிகளாக அங்கீகரிக்க முடியும்? மைத்தேயி இனத்தில் சில பிரிவினர் வேண்டுமானால் தாழ்த்தப்பட்டோர் -எஸ்சி பட்டியலில் வர முடியும் அல்லது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியும். பழங்குடி இனத்தவராக எப்படி எதனடிப்படையில் அங்கீகாரம் தருவது? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய ஒரு உத்தரவை உச்சநீதிமன்றம் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும். ஆகையால் மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications