டெல்லிக்கு ஓடியாந்துருங்க.. ம.பி. பகுஜன் எம்எல்ஏக்களுக்கு மாயாவதி அவசர அழைப்பு!
டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் வெற்றி பெறும் 4 வேட்பாளர்களையும் உடனடியாக டெல்லிக்கு வருமாறு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அழைத்துள்ளார்.
இவர்களை பாஜக வளைத்து பிடித்து விடும் என்ற அச்சத்தால் டெல்லிக்கு அழைத்துள்ளார் மாயாவதி. மத்தியப் பிரதேசத்தில் யார் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது என்பதில் குழப்பம் நிலவுகிறது. காரணம், பாஜகவும், காங்கிரஸும் அங்கு மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு அங்கு 4 இடங்களில் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. பாஜக 112, காங்கிரஸ் 107 என ஊசலாடி வருகின்றன.

116 இடங்கள் தேவை
பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை. எனவே பாஜக தரப்பில் பிற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

நான்கு பேர்
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் 4 எம்எல்ஏக்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். இதனால் அவர்களை உடனடியாக டெல்லிக்கு வருமாறு மாயாவதி அழைத்துள்ளார்.

இரவோடு இரவாக ஆலோசனை
இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் இவர்கள் டெல்லி வந்து சேருவார்கள் எனத் தெரிகிறது. அவர்களுடன் ம.பியில் யாருக்கு ஆதரவு தருவது என்று மாயாவதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

பாஜக, காங்கிரஸ்
மறுபக்கம் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவைக் கோரி பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்பில் பலர் களமிறங்கி விட்டதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அவர்கள் மாயாவதியை அணுகியுள்ளனராம். ஆனால் மாயாவதி யாருக்கும் இன்னும் பதில் சொல்லவில்லை.
மாயாவதி மீது சிபிஐ வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications