டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருந்துகள் மேஜிக் செய்யாது.. சமூக விலகல்தான் தீர்வு.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சொல்கிறது

Google Oneindia Tamil News

டெல்லி: மேலும் 60 தனியார் பரிசோதனை மையங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் பார்வகவா.

Recommended Video

    சுய ஊரடங்கு பற்றி மக்கள் கருத்து | #JANATACURFEW | ONEINDIA TAMIL

    முன்பு வெறும் அரசு ஆய்வகங்கள் மட்டும்தான் இந்த ஆய்வுகளை செய்ய முடிந்தது. பிறகு 18 தனியார் ஆய்வகங்களுக்கு, இந்த வசதி நீட்டிக்கப்பட்டது. இப்போது 60 ஆய்வகங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Medicines are Not Magic, says ICMR

    பரிசோதனை முடிவுகள் வேகமாக வரும், அதிகம் பேரை பரிசோதனை செய்துகொள்ள முடியும். இருப்பினும், இந்த அளவு போதாது என்பது தான் மக்களின் கவலையாக இருக்கிறது.

    பார்கவா, மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்துவதற்காக, நாம் சில மருந்துகளை பயன்படுத்துகிறோம். ஆனால் மருந்துகள் என்பது மாயாஜாலம் செய்யக்கூடியது கிடையாது. வளர்ச்சியடைந்த நாடுகள், மருத்துவத் துறையில் முன்னேறிய நாடுகள் போன்றவை கூட கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படக்கூடிய மரணங்களை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகின்ற.

    எனவே, மக்கள் தனித்தனியாக வசிப்பதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும். போதியஅளவுக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை என்று பொதுமக்கள் கூறுவதை நாம் பார்க்க முடிகிறது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் வரை சோதனை நடத்த முடியும்.

    கொடூர கொரோனா.. உலகத்தில் 3 லட்சம் பேருக்கு பாதிப்பு.. ஒரு நாளில் 1344 பேர் பலிகொடூர கொரோனா.. உலகத்தில் 3 லட்சம் பேருக்கு பாதிப்பு.. ஒரு நாளில் 1344 பேர் பலி

    பிரான்ஸ் நாட்டில் இதுவரை மொத்தம் பத்தாயிரம் பேரை தான் பரிசோதித்தனர், பிரிட்டனில் 16000 பேர், கொரியாவில் 80 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில், 5000 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன இந்தியாவில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

    எங்கெல்லாம் வைரஸ் பாதிப்பு காரணமாக நோயாளிகள் இறந்தார்களோ, அந்த மாவட்டங்கள் முழுமையாக சீல் வைக்கப்படும். அனைத்து மாநில அரசுகளும் அதைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவுவதை தடுக்க வேண்டும். அந்த பரவல் சங்கிலி உடைக்கப்பட வேண்டும்.

    இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுத்து வரக் கூடிய நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Medicines are Not Magic, says ICMR, We have been using some medicines, but they, We have had only a few deaths, says ICMR's Bhargava.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X