சம்மதமின்றி உடலுறவு.. தோழியாக இருந்தாலும் ஆணுக்கு உரிமை கிடையாது: நீதிபதி சொன்னதுமே விழித்த தொழிலாளி
சென்னை: கட்டிடப்பணியில் ஒரு கட்டிடத்தொழிலாளி ஈடுபட்டிருந்தார்.. அப்போது கட்டிடப்பணி நடக்கும் இடத்துக்கு அருகிலேயே, குடியிருப்பு பகுதியிலுள்ள சிறுமி ஒருவருடன் நெருங்கி பழகினார்.. ஒருகட்டத்தில் சிறுமியை தவறாகவும் பயன்படுத்தி கொண்டார்.. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசுக்கு சென்றார்கள்.. கட்டிடத்தொழிலாளியை கைது செய்த போலீசார், அவரை சிறையிலும் அடைத்தனர்.. இப்போது இந்த வழக்கில் ஜாமீன் கேட்டுள்ளார் கட்டிடத்தொழிலாளி. இன்று விசாரணைக்கு இந்த ஜாமீன் வழக்கு வந்தபோது, நீதிபதி என்ன சொன்னார்?
சமீபத்தில் கேரளாவில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.. அங்குள்ள நபர், இளம்பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளனர்.. ஓட்டலில் ரூம் போட்டு, இருவரும் சம்மதத்துடன் உடலுறவிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பிறகு இருவருக்குள்ளும் மனக்கசப்பு வந்துவிட்டது.

உடலுறவு சம்மதம்
தன்னை காதலன் ஏமாற்றிவிட்டதாகவும், பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அந்த பெண் கோர்ட்டுக்கு சென்றார்.. இந்த வழக்கை விசாரித்த கேரளா ஹைகோர்ட்,
உடலுறவு இரு தரப்பிலுமே சம்மதத்துடன் நடந்துவிட்டு, பிறகு சில காரணங்களால் பிரேக் அப் ஏற்பட்டால் அதை மட்டும் காரணமாக வைத்து பாலியல் வன்புணர்வு எனக் கூறிவிட முடியாது.. அவர்களுக்கு இடையேயான உடலுறவு, பெண்ணின் சம்மதம் இல்லாமல் நடந்தது என்று கருதவும் முடியாது. பலாத்காரமாகவும் அதனை கருத முடியாது..
புகார்தாரர் ஏற்கனவே திருமணமானவராக இருப்பதால், திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி கொடுத்து சம்மதம் பெற்றதாக குற்றம் சாட்ட முடியாது, எனவே, சம்மதத்துடன் ஏற்பட்ட உறவு பின்னர் கசந்து போனால், அதைப் பாலியல் வன்புணர்வாகக் கருத முடியாது என்று தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.
கட்டிட தொழிலாளி மைனர் சிறுமி
இப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் நடந்த சம்பவம் ஒன்றில் பரபரப்பு தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டுள்ளது.. என்ன நடந்துது?
டெல்லி விகாஸ்புரி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர், அங்குள்ள மைனர் பெண்ணிடம் நட்பாக பழகி, அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்... கடந்த 2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரை, சிறுமியை அந்த தொழிலாளி, பலமுறை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளதாக கூறி, சிறுமியின் பெற்றோர் புகார் தந்தனர். .
18 வயது பூர்த்தி - உடலுறவு
இதையடுத்து, கட்டிட தொழிலாளி கைதானார்.. இந்த வழக்கு விசாரணையில், ஜாமீன் கேட்டு, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் கட்டிட தொழிலாளி..
அவர் தன்னுடைய ஜாமீன் மனுவில், "பாலியல் உறவில் ஈடுபட்டபோது அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டது.. அவருடன் நட்பாக பழகி அவரது சம்மதத்துடன்தான் உடலுறவு கொண்டேன்.. எனவே தனக்கு ஜாமீன் வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி கிரீஷ் கத்பாலியா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதி "தோழியாக இருந்தாலும்சரி, அவரது சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை கிடையாது..
ஜாமீன் மனு தள்ளுபடி
பாதிக்கப்பட்ட பெண்ணின் கல்வி சான்றிதழ்களின் அடிப்படையில் சம்பவம் நடந்தபோது அவர் மைனர் சிறுமியாக இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டிருந்தாலும் அது சட்டப்படி குற்றமாகவே கருதப்படும்" என்று தெரிவித்து, மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மனைவியின் அனுமதியின்றி கணவர் உடலுறவு கொள்வதை பலாத்காரமாக கருதலாம் என்று ஏற்கனவே நீதிமன்றங்களின் தீர்ப்பு உள்ள நிலையில், தோழிகள் விவகாரத்திலும் நீதிமன்றம் தெரிவித்துள்ள இந்த தீர்ப்பு பலரது கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications