வெளிநாட்டு நிதி.. ஆஸ்பாம் தொண்டு நிறுவனத்துக்கு சிக்கல்! சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை பரிந்துரை
டெல்லி: ஆக்ஸ்பாம் இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளிநாடு நிதிகளை பெறுவதில் இந்திய சட்ட விதிகளை மீறியதாக கூறி சிபிஐ விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு பரிந்துரைத்து இருக்கிறது. இதன் உரிமத்தை புதுப்பிக்க கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ள நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவும் வகையில் பிரிட்டனில் தொடங்கப்பட்டது ஆக்ஸ்பாம் தன்னார்வ தொண்டு நிறுவனம். கென்யா தலைநகர் நைரோபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த ஆக்ஸ்பாம் நிறுவனம், இந்தியா உட்பட பல உலக நாடுகளில் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் வறுமையில் வாடும் மக்கள், உணவின்றி பசியால் வாடுபவர்கள், ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள், முதியோர்களுக்கு உணவு உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருவதுடன், இது தொடர்பாக ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 20 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த ஆக்பாம் நிறுவனத்திற்கு பல நாடுகளில் இருந்து பல கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது.
வெளிநாட்டு நிதி: இந்த நிலையில் ஆஸ்பாம் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு நிதிகளை பெறுவதில் இந்திய சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளிநாட்டு நிதி பெற்றதில் விதிகளை மீறியதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு தற்போது பரிந்துரைத்து உள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் - 2010 இன் கீழ் நிதிகளை வசூலிப்பதற்கான ஆக்ஸ்பாம் இந்தியாவின் உரிமத்தை மத்திய அரசு 14 மாதங்களாக புதுப்பிக்காமல் இருந்தது. இந்த நிலையில் ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு நிதி பங்களிப்புகளை FCRA வின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பி இருப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் கண்டுபிடித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

வருமான வரித்துறை சர்வே: இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனத்தின் FCRA உரிமத்தை புதுப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்ததை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பது நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள ஆக்ஸ்பாம் அலுவலகத்தில் வெளிநாட்டு நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக சர்வே மேற்கொண்டனர். இந்த வருமான வரித்துறை சர்வேயில் ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் FRCA விதிகளை மீறி செயல்பட்டதற்கான ஆதாரமாக சில ஈமெயில்கள் கிடைத்து இருக்கின்றன.
பண பரிமாற்றம்: அதேபோல் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனத்திற்கு தாராளமாக நிதி வழங்கி வந்தது இந்த ஆய்வில் தெரியவந்து இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியாவில் சமூக சேவைகளை மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்ட ஆக்ஸ்பாம் அமைப்பு, அதன் ஊழியர்கள் மற்றும் துணை நிறுவனங்கள் மூலமாக சிபிஆர் எனப்படும் கொள்கை ஆராய்ச்சி மையத்திற்கு கமிஷனாக பணம் கொடுத்ததாகவும் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். ஆஸ்பாம் இந்தியா நிறுவனத்தின் டிடிஎஸ் தகவலின் மூலம் கடந்த 2019 - 20 நிதியாண்டில் ரூ.12.71 லட்சம் சிபிஆர் நிறுவனத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications