மோடி பக்தர்கள் இயல்பிலேயே படிப்பறிவு இல்லாதவர்கள்.. சுப்பிரமணியசாமி சுளீர் விமர்சனம்
டெல்லி: ‛‛மோடி பக்தர்கள் இயல்பிலேயே படிப்பறிவு இல்லாதவர்கள் அல்லது போலி கல்வி சான்றிதழ்கள் கொண்டவர்கள்'' என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் சுப்பிரமணியசாமி. தமிழகத்தை சேர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக இந்திய பொருளாதாரம், இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரங்கள் குறித்து அவர் பகிரங்கமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் விட்டு வைப்பது இல்லை. அவர்களை வெளிப்படையாகவே விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது கடும் விமர்சனம் ஒன்றை சுப்பிரமணியசாமி முன்வைத்துள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:

நிர்மலா சீதாராமன் விளக்கம்
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் நேற்று இந்திய பொருளாதாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து நிர்மலா சீதாரமன் பேசினார். அப்போது அவர், ‛‛உலகிலேயே இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. கொரோனா, ரஷியா- உக்ரைன் போர் உள்ளிட்ட சூழலிலும் 7 சதவீதத்திற்குள் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதாரம் மீண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை'' என்றார்.

சுப்பிரமணியசாமி விமர்சனம்
இதனை திமுக உள்பட எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே நிர்மலா சீதாராமனின் விளக்கத்தை சுப்பிரமணியசாமி விமர்சித்தார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை'' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அவர் சொல்வது சரிதான். ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவிட்டது. எனவே தற்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது குறித்த கேள்வி எழவே இல்லலை '' என தெரிவித்து இருந்தார்.

பக்தர்கள் விரும்பமாட்டார்கள் என பதில்
இந்த டுவிட்டர் பதிவை தொடர்ந்து பரிக்சித் பதாக் என்பவர், ‛‛சாமிஜி, பக்தர்கள் உங்கள் டுவிட்டர் பதிவை விரும்பமாட்டார்கள். அவர்களின் கூற்றுப்படி நாம் அனைவரும் நல்லகாலத்தில் இருக்கிறோம்''என கருத்து தெரிவித்து இருந்தார். இதன்மூலம் உங்கள் கருத்துகளை மோடியின் பக்தர்கள் ஏற்கமாட்டார்கள். மாறாக மத்திய அரசு கூறியதுபோல் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லகாலம் உள்ளதை தான் ஏற்பார்கள் எனும் வகையில் தெரிவித்து இருந்தார்.

மோடி பக்தர்கள் படிப்பறிவு இல்லதாவர்கள்
இதற்கு சுப்பிரமணியசாமி பதிலளித்து இருந்தார். அதில், ‛‛மோடி பக்தர்கள் இயல்பிலேயே படிப்பறிவு இல்லாதவர்கள் அல்லது போலியான கல்வி சான்றிதழ்களை கொண்டவர்கள். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம் என கூறியவர்கள்தற்போது பொருளாதார மந்தநிலை இல்லை எனக்கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்'' என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications