மோடியின் 2.0 அமைச்சரவை.. புதிதாக 15 கேபினட் அமைச்சர்கள்.. மொத்தம் 43 பேர் பதவியேற்பு.. முழு லிஸ்ட்
டெல்லி : பிரதமர் மோடியின் 2.0 அமைச்சரவையில் 12 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் 43 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த பதவியேற்பு மூலம் முப்பத்தாறு புதிய அமைச்சர்கள் மோடியின் அரசாங்கத்தில் இணைந்துள்ளார்கள், ஏழு பேர் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். நிதி, வெளியுறவு, உள்துறை மற்றும் பாதுகாப்பு ஆகிய பெரிய நான்கில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.

ராஜினாமா செய்த அமைச்சர்கள்
முன்னதாக சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர், சந்தோஷ்குமார் கங்வார், பாபுல் சுப்ரியோ, தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ, ரத்தன்லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, திபஶ்ரீ செளத்ரி ஆகிய 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

யார் யார்
இந்நிலையில் ராஜினாமா செய்த 12 துறைகள் உள்பட மொத்தம் 43 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அவர்களின் விவரம் பின்வருமாறு: நாராயணன் ரானே. சர்பானந்த சோனோவால், வீரேந்திர குமார். ஜோதிராதித்ய சிந்தியா. ராம்சந்திர பிரசாத் சிங், அஸ்வின் வைஷ்ணவ், பாஸுபதி குமார் பராஸ், கிரண் ரிஜிஜு.

அமைச்சர்கள் பட்டியல்
ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் புரி, மன்சுக் மன்தாவியா, பூபேந்தர் யாதவந்த், புருஷோத்தம் ரூபாலா, கிஷன் ரெட்டி, அனுராக் சிங் தாக்கூர், பங்ஜக் சவுத்ரி. அனுப்ரியா சிங் படேல். சத்ய பால் சிங் பாகல், ராஜீவ் சந்திரசேகர், சோபா கராண்டஜே, பானு பிரதாப் வர்மா, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், மீனாட்சி லேகி, அனுபமா தேவி, நாராயணசாமி, கவுஷல் கிஷோர், அஜய் பட், பி எல் வர்மா, அஜய் குமார், சவுகான் தேவ்சிங், பகவந்த் கூபா, கபில் மோரேஷ்வர் பாட்டீல், சுஷ்ரி பிரதிமா பவுமிக், சுபாஷ் சர்கார், பகவத் கிஷன் ராவ் காரத், ராஜ்குமார் ரஞ்சன் சிங், பாரதி பிரவீன் பவார், பிஷ்வேஸ்வரர் துடு, சாந்தனு தாகூர், முஞ்சபரா மகேந்திர பாய், ஜான் பார்லா, எல் முருகன், நிஸித் பிரமானிக். பொறுப்பு விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

குஜராத் தேர்தல்
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தை குறிவைத்து மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுகிறது. இரண்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம். இதேபோல் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு காரணமாக ஜோதிராதித்யா சிந்தியா, முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனவால் மற்றும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது,
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications