இவ்வளவு மோசமான பிரதமரை பார்த்ததே இல்லை.. பிரதமருக்கான கடமை என்னவென்றே தெரியவில்லை.. ராகுல் காந்தி
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார். இந்த நிலையில், பிரதமருக்கான கடமை என்ன என்பதே மோடிக்கு தெரியவில்லை என்றும், ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்ததே இல்லை என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது 2 மணி நேரத்திற்கும் மேலாக மோடி பேசினார். தனது பதிலுரையில் கடைசியில் தான் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் பதிலுரை குறித்து ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி வெறும் 2 நிமிடங்கள்தான் மணிப்பூர் குறித்து பேசினார். மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி நகைப்புக்குரியதாக கருதக்கூடாது. மணிப்பூரில் பல மாதங்களாக பற்றி எரிகிறது. மக்கள் கொல்லப்படும் போது நாடாளுமன்றத்தில் பிரதமர் சிரிப்பது வெட்ககேடானது. பிரதமர் மோடி கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும்.
மணிப்பூர் தொடர்பான எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். இந்திய ராணுவம் 2 நாட்களில் மணிப்பூர் கலவரத்தை தடுத்து இருக்கும். ஆனால், கலவரத்தை தடுக்க பிரதமர் விரும்பவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் செல்வதற்கான அறிகுறி கூட தெரியவில்லை. தீவிரமான ஒரு விஷயத்தை எந்த ஒரு பிரதமரும் இப்படி கையாண்டுள்ளாரா? என்பது தெரியவில்லை.
மணிப்பூரில் பாரதமாதா கொலை செய்யப்பட்டதாக நான் கூறியதை திரித்து கூறுகிறார். நான் மீண்டும் சொல்கிறேன். இந்தியா என்ற கருத்தியலை பாஜக கொலை செய்து விட்டது. பிரதமருக்கான கடமை என்ன என்பதே மோடிக்கு தெரியவில்லை. ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்ததே இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
மேலும் ராகுல் காந்தி கூறுகையில், " பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என எனக்கு தெரியும். ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல மாட்டேன். ஊடகங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. ராஜ்யசபா, லோக்சபா டிவிக்கள் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. நான் எனது பணியை செய்து கொண்டே இருப்பேன். பாரதமாத எங்கெல்லாம் தாக்கப்படுகிறாரோ.. அங்கெல்லாம் நான் பாதுகாக்க வருவேன்.
மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என்றுதான் பிரதமர் மோடி நினைக்கிறார். அதை சரி செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. நான் பேசிய பாரத மாதா என்ற வார்த்தைகள் நடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அரசியலில் 19 ஆண்டு காலமாக இருக்கிறேன். பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் மணிப்பூர் மாநிலத்தில் நான் கேட்டது பார்த்தது எல்லாம் அசாதாரணமானதுதான்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications