டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அரசுக்கு வெட்கம் இலலையா.. மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறித்து ஓவைசி காட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி; டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் நடந்த வன்முறை விவகாரத்தில் மத்திய அரசே குற்றம்சாட்டி ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி பேசினார். அப்போது அவர் பேசுகையில் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறதே என்ற வெட்கம் மோடி அரசுக்கு இல்லையா என்றும் ஒவைசி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்

டெல்லி இஸ்லாமியா ஜாமியா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச்சூடு மற்றும் சாஹீன் பக் துப்பாக்கிச்சூடு சம்பவம் என தலைநகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நாடாளுமன்றத்தில் கடும் விவாதத்தில் கிளப்பி உள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

Modi govt has no shame, firing on students: Owaisi

இந்நிலையில் தலைநகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பேசுகையில்,
"நாங்கள் ஜாமியாவின் மாணவர்களுடன் இருக்கிறோம். இந்த அரசாங்கம் மாணவர்களிடம் கொடூரமாக நடந்து கொண்டது. மாணவர்கள் கண்களை இழந்துவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா? எங்கள் மகள்கள் தாக்கப்பட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா? "அவர்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள், மாணவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்களே என்ற வெட்கம் மத்திய அரசுக்கு இல்லையா" என்றார்

இந்திய மக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள்.. ஜாமியா தாக்குதல் குறித்து காங். எம்பி ஆவேசம்இந்திய மக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள்.. ஜாமியா தாக்குதல் குறித்து காங். எம்பி ஆவேசம்

இதனிடையே லோக்சபாவில் பாஜக எம்பி அனுராக் தாக்கூருக்கு எதிராக காங் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பெரும் அமளியில் ஈடுபட்டததால் இரண்டு முறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

English summary
"The Centre is not ashamed that students are beating up children,students shooting them down": Owaisi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X