டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களின் முன்னுதாரணம்.. விவசாயி சேலம் சாந்தியுடன் காணொலி காட்சியில் உரையாடிய பிரதமர் மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: சேலத்தை அடுத்த வீரபாண்டியில் பெண்களால் நடத்தப்படும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சாந்தியுடன் பிரதரம நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.

விவசாயிகளுக்கு பிரதமர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 10ஆவது தவணை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பங்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது.

இதையொட்டி விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம கலந்துரையாடினார்.

மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யனுமா? சுற்றறிக்கை அனுப்பிய யுஜிசிக்கு கீ.வீரமணி கண்டனம்மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யனுமா? சுற்றறிக்கை அனுப்பிய யுஜிசிக்கு கீ.வீரமணி கண்டனம்

வீரபாண்டி

வீரபாண்டி

இந்த நிகழ்ச்சியில் சேலத்தை அடுத்த வீரபாண்டியில் பெண்களால் நடத்தப்பட்டு வரும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான சாந்தியுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஷோமிதா பிஸ்வாஸ், ஆட்சியர் கார்மேகம் மற்றும் இந்த நிறுவனத்தின் 5 இயக்குநர்கள், 30 விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு

தமிழக அரசு

வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை நபார்டு வங்கி ஆகியவற்றின் உதவியுடன் எண்ணெய் வித்துகளில் இருந்து எண்ணெய் பிழிதல், மாவு தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ 18.28 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது.

பெண் விவசாயிகள்

பெண் விவசாயிகள்

இதற்காக அதன் இயக்குநர் விவசாயி சாந்தி மற்றும் அவரது குழுவில் உள்ள பெண் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். விவசாயி சாந்தியை பாராட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி முன்னுதாரணமாக கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும் என்று பாராட்டினார். வேளாண்மை பணிகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேளாண்மை பணிகளையும் சேர்த்திட வேண்டும் என விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தனர்.

English summary
PM Narendra Modi interacted with Salem Woman farmer Shanthi today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X