கோவில்களை இடிக்கிறார்.. ராவணன் போல் பிரதமர் மோடி.. கோர்ட்டில் விரைவில் வழக்கு.. சு.சாமி முடிவு
டெல்லி: ராவணன் போல் பிரதமர் மோடியும் கோவில்களை இடிக்கிறார். அவருக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடர உள்ளேன் என பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி திடீரென்று கூறியுள்ள நிலையில் பின்னணியில் உள்ள விஷயம் வெளியாகி உள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணியன்சாமி. தமிழகத்தை சேர்ந்த இவர் மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்நிலையில் தான் தொடர்ந்து சுப்பிரமணியன்சாமி, பாஜக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியை அவர் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

பாஜக தலைவர்கள் மீது விமர்சனம்
பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தியாவின் பணவீக்கத்தை அடிக்கடி சுட்டிக்காட்டும் சுப்பிரமணியசாமி நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். மேலும் கட்சி சார்ந்த விஷயங்களை குறிப்பிட்டு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் அவர் சாடி வருகிறார்.

நேற்றைய விமர்சனம்
டெல்லி மாநகராட்சி மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில் பிரதமர் மோடி, ஜேபி நட்டாவை அவர் நேற்று குறை கூறியிருந்தார். குறிப்பாக பிரதமர் மோடியை சுப்பிரமணியசாமி அடிக்கடி அடிக்கடி அட்டாக் செய்வார். அதிலும் இந்தியா-சீனா விவகாரங்களை தான் சுப்பிரமணியசாமி குறிப்பிட்டு மோடிக்கு எதிராக கருத்துகளை பதிவிடுவார். மேலும், இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பதாகவும், அதனை மோடி அரசு வேடிக்கை பார்ப்பதாகவும், பாகிஸ்தானை எச்சரிக்கை இந்தியா, சீனாவை மட்டும் எச்சரிப்பது இல்லை என தொடர்ந்து கூறி வருகிறார்.

மோடியை ராவணனுடன் ஒப்பிடு
இந்நிலையில் தான் மீண்டும் பிரதமர் மோடியை இன்று சுப்பிரமணியன்சாமி விமர்சனம் செய்துள்ளார். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது சுப்பிரமணியன் சாமி, பிரதமர் மோடியை ராவணன் என்றே கூறியுள்ளார்.

மும்பை உயர்நீதிமன்றத்தில்...
இதுதொடர்பாக சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ராவணன் போன்று மோடியும் மதவாதி என கூறி கொண்டு வாரணாசி, உத்தரகாண்ட்டில் உள்ள கோவில்களை இடிக்கிறார் அல்லது கோவில்களை கைப்பற்றுகிறார். இப்போது பட்னாவிசுடன்(மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்) சேர்ந்து பந்தர்பூரில் உள்ள புனித தலங்களை அழிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படுகொலையை தடக்க உயர்நீதிமன்றத்தை விரைவில் அணுக உள்ளேன்'' என்றார்.

காரணம் என்ன?
அதாவது மகாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூர் சாலை உள்பட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.இதற்காக கோவில நிலங்கள் கையகப்படுத்தலாம் என அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் சுப்பிரமணியசாமி பிரதமர் மோடி மற்றும் தேவேந்திர பட்னாவிஸை விமர்சனம் செய்துள்ளதோடு, மும்பையில் உள்ள உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications