மோடி 2.oஇல் இப்போது 77 அமைச்சர்கள்.. 'சிறிய அரசு சிறப்பான ஆட்சி கோஷம்' என்ன ஆனது.. ஏன் இந்த மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சரவையில் தற்போது 77 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், பிரமதர் மோடி தலைமையில் முதலில் ஆட்சி அமைந்த போது முன் வைக்கப்பட்ட 'சிறிய அரசு சிறப்பான ஆட்சி' (maximum government, maximum governance) என்ற முழக்கம் என்ன ஆனது என்ற கேள்வி இயல்வாகவே எழுகிறது.

பிரதமர் மோடி 2ஆம் முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அமைச்சரவை மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், மோடி 2.0இல் நேற்று முதல்முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதற்கு முன் அமைச்சராக இருந்த சுமார் 20% பேர் மாற்றப்பட்டனர். மூத்த அமைச்சர்களாக அறியப்பட்ட பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ்வர்தன் என முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்தனர்.

மத்திய அமைச்சரவை

மத்திய அமைச்சரவை

தமிழ்நாட்டைச் சேர்ந்த எல் முருகன் உள்ளிட்ட 43 பேர் நேற்று பதவியேற்றனர். ஏற்கனவே, இணை அமைச்சர்களாக இருந்த ஏழு பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவி உயர்வைப் பெற்றனர். 36 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மோடியின் புதிய அமைச்சரவையில் 12 தலித்துகள், 27 ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 11 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 50 வயதுக்குக் குறைவான 14 பேரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

'சிறிய அரசு சிறப்பான ஆட்சி'

'சிறிய அரசு சிறப்பான ஆட்சி'

கடந்த 2014இல் மன்மோகன் சிங் அரசில் மொத்தம் 76 அமைச்சர்கள் இருந்தனர். தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி பிறகு, மோடி அமைச்சரவையில் முதலில் 43 அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். அப்போது பாஜக சார்பில் 'சிறிய அரசு சிறப்பான ஆட்சி' (maximum government, maximum governance) என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டது.

77 அமைச்சர்கள்

77 அமைச்சர்கள்

ஆனால், ஏழு ஆண்டுகளுக்குப் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்ற 36 பேருடன் பிரதமர் மோடி அமைச்சரவையில் இப்போது 77 அமைச்சர்கள் உள்ளனர். இது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் இருந்து நான்கு மட்டுமே குறைவாகும். மொத்தம் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 15% பேரை, அதாவது 81 பேரை அமைச்சர்களாக நியமிக்கலாம். இணை அமைச்சர்களாக இருந்து கேபினெட் அமைச்சர்களான ஏழு பேரைச் சேர்ந்து தற்போது மொத்தம் 58 கேபினெட் அமைச்சர்களை மோடி அமைச்சரவை கொண்டுள்ளது.

பெரியது

பெரியது

கடந்த 2014ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றை மந்திரத்தையே முன் வைத்து மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியைப் பிடித்தது. அப்போது கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தவே இத்தனை அமைச்சர்கள் பதவிகள் அளிக்கப்பட்டதாகவும் பாஜக கடுமையாக விமர்சித்தது. அதற்கேற்ப பிரதமர் மோடி முதலில் ஆட்சியை அமைத்த போது 43 அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், இப்போது சுமார் 77 அமைச்சர்கள் உள்ளனர். இது மன்மோகன் சிங் அமைச்சரவையைவிட மிகப் பெரியது.

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல்

இந்த அதிரடி அமைச்சரவை மாற்றத்திற்குத் தேர்தல்களே முக்கிய காரணமாக்கப் பார்க்கப்படுகிறது. பொதுவாகவே 10 ஆண்டுகள் ஒரு அரசு ஆட்சியில் இருக்கும்போது, அதன் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பது இயல்பு. இதைக் கருத்தில் கொண்டே வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கேபினெட் அமைச்சர்களாக உள்ளவர்களில் 27 பேர் ஒபிசி வகுப்பைச் சேர்ந்தவர்களாகும்.

சட்டசபைத் தேர்தல்கள்

சட்டசபைத் தேர்தல்கள்

அதேபோல மக்களவை தேர்தலுக்கு முன் சுமார் 16 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளன. அதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே ஆட்சியில் உள்ளது. அமைச்சரவை மாற்றத்தில் இதுவும் எதிரொலித்துள்ளது. இதில் பெரிய மாநிலங்கள் என்று பார்த்தால், உத்தரப் பிரதேசம்(2022), கர்நாடகா(2023) தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஏழு பேரும், கர்நாடகாவில் இருந்து நான்கு பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இந்த அமைச்சரவை மாற்றம் பாஜகவுக்கு எந்தளவு பலன் அளிக்கும் என்பது வரும் காலத்தில் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+