பாஸ்போர்ட், இந்திய கொடி அவசியம் - உக்ரைனில் இருந்து தாயகம் திரும்புவோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட், அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும் என்று நாடு திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லி: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ருமேனியா, ஹங்கேரி எல்லைக்கு வருவோர் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை ஒட்டியிருக்க வேண்டும். தேவைப்படின் 2 கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்கவும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
ரஷ்யா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து வான்வெளியை உக்ரைன் மூடிய நிலையில், அங்குள்ள இந்தியர்களை நிலப்பகுதி வழியாக மீட்பதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக வெளியுறவுத்துறை அதிகாரிகள், உக்ரைனின் எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு, ரொமேனியா ஆகிய நாடுகள் உக்ரைன் எல்லையில் அமைந்துள்ளன. மீட்பு பணி தொடர்பாக இந்த நாடுகளில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

சாலை வழியாக மீட்க முயற்சி
உக்ரைன் -ரஷ்யா இடையே நேற்று முதல் போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வரவேண்டும் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ருமேனியா வழியாக மீட்பு
உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பெற்றோர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. உக்ரைனில், இந்தியர்களை பொறுத்தவரை சுமார் 20,000 பேர் இருக்க வாய்ப்புள்ளது.

மாணவர்கள் தவிப்பு
தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக 1,500 லிருந்து 3,000 பேர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. கேரளாவை சேர்ந்த மாணவர்கள் 2,800 பேரும், கர்நாடகாவை சேர்ந்த மாணவர்கள் 1,800 படித்து வருகின்றனர். போர் தீவிரமடைந்துள்ளதால் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

2 விமானங்கள் இயக்க திட்டம்
இவ்வாறு ஒவ்வொரு மாநிலமும் உக்ரைனில் இருக்கக்கூடியவர்களின் தகவல்களை மத்திய அரசிடம் வழங்கி வருகிறது. இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களையும், இந்திய மாணவர்களையும் மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

பணம் பாஸ்போர்ட், கொரோனா தடுப்பூசி
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட், அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும் என்று நாடு திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ருமேனியா, ஹங்கேரி எல்லைக்கு வருவோர் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை ஒட்டியிருக்க வேண்டும். தேவைப்படின் 2 கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்கவும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications