டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜும்மாவில் துவங்கியது! போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்! கோரிக்கை என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்து உள்ளனர். முக்கியமான சில கோரிக்கைகளை முன் வைத்து இவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன.

எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசும் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இவர் பொதுவாக விவாதத்தில் தவறான சில கருத்துக்களை பேசுவார், எதிர் தரப்பில் இருப்பவர்களையும் கடுமையாக இவர் விமர்சனம் செய்வார்கள்.

இந்த நிலையில்தான் நபிகள் நாயகம் குறித்து அவர் தவறாக பேசியது விமர்சனங்களை சந்தித்தது. இவரை தொடர்ந்து பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டால் நபிகள் நாயகத்தை விமர்சித்து ட்விட் செய்தார்.

நுபுர் சர்மா சர்ச்சை : ஜும்மா மசூதி உட்பட.. நாடு முழுவதும் வெடித்த இஸ்லாமியர்கள் போராட்டம் நுபுர் சர்மா சர்ச்சை : ஜும்மா மசூதி உட்பட.. நாடு முழுவதும் வெடித்த இஸ்லாமியர்கள் போராட்டம்

நுபுர் சர்மா

நுபுர் சர்மா

இது பெரிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கத்தார் உள்ளிட்ட நாடுகள் நுபுர் சர்மாவின் கருத்து தொடர்பாக இந்தியாவிடம் விளக்கம் கேட்டது. இதுவரை இந்தியாவிற்கு 15 நாடுகள் இந்த விவகாரத்தில் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமான், அரபு அமீரகம், ஜோர்டன், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், பாகிஸ்தான், மாலத்தீவு, லிபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு எதிராக திரண்டு உள்ளன.

நபிகள் நாயகம்

நபிகள் நாயகம்

இதையடுத்து இந்தியா சார்பில் நுபுர் சர்மா கருத்திற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. நபிகள் பற்றி நுபுர் பேசியது இந்திய அரசின் கருத்து கிடையாது. அது தனிப்பட்ட, கலக்கத்தை ஏற்படுத்தும் நபர்களின் கருத்து என்று இந்தியா விளக்கம் அளித்தது. இந்த பிரச்சனையின் சூடு தணிந்துள்ள நிலையில்தான், தற்போது டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

ஜும்மா மசுதி

ஜும்மா மசுதி

டெல்லி ஜும்மாவில் முதலில் இஸ்லாமியர்கள் போராட்டம் தொடங்கியது. அங்கு நுபுர் சர்மாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன்பின் மசூதி வெளியே போராட்டம் நீடித்தது. வெள்ளிக்கிழமை சரியாக தொழுகை முடித்ததும் போராட்டம் தொடங்கியது. இதையடுத்து இன்னொரு பக்கம் மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் செய்தனர். அவர்கள் மேல் போலீசார் லத்தி தாக்குதல் நடத்தினர்.

 என்ன போராட்டம்

என்ன போராட்டம்

இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் உத்தர பிரதேசத்தில் லக்னோவில் சில இடங்களிலும். சஹாரன்பூரிலும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. இங்கும் போராட்டம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு எதிராக லத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. கர்நாடகாவில் நுபுர் சர்மா உருவ பொம்மையை தூக்கிலிட்டு இஸ்லாமியர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். நாடு முழுக்க ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 கோரிக்கை

கோரிக்கை

நுபுர் சர்மாவை பாஜகவில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக பாஜக விளக்கம் அளிப்பதோடு, நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் வகையில் இனியும் கட்சியில் யாரும் பெற மாட்டார்கள் என்று உறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். டெல்லியில் இந்த போராட்டம் பெரிதாகாமல் தடுப்பதற்காக போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர்.

English summary
Muslims protest over Nupur Sharma comment on Prophet Mohammed: What are the demands? டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X