மீண்டும் இந்தியாவுக்கு எதிராக நாகா விடுதலைப் போர்-டெல்லியில் அமித்ஷாவுடன் நாகாலாந்து முதல்வர் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசுடனான அமைதி ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக அண்மையில் நாகாலாந்து தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. மேலும் நாகா இன மக்களுக்கு தனி அரசியல் சாசனம் தனிக் கொடி உருவாக்க மத்திய அரசு அனுமதி தராததால் இந்தியாவுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துவோம் என அந்த அமைப்புகள் எச்சரித்த நிலையில் நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ தலைமையிலான அமைச்சர்கள் குழு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது.

ஆங்கிலேயரிடம் இருந்து நாடு விடுதலை அடைந்த பின்னரும் கூட நாகாலாந்து என்பது ஒரு தனிநாடாக இருந்தது. அப்போது நாகாலாந்து நாட்டுக்கு தனி ராணுவமும் இருந்தது. பின்னரே ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியானது. ஆனால் இந்தியாவுடன் இணைய மறுத்த நாகாலாந்து ராணுவமே இப்போதும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கிர நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சிலாகும்.

india nagaland

நாகலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் என்ற ஆயுத அமைப்பு பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடந்தன. இந்த அமைப்புகள் பல மத்திய அரசுடன் 25 ஆண்டுகளுக்கு முன்னர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனாலும் நாகாலாந்து மாநிலத்துக்கு தனி அரசியல் சாசனம், நாகா இன மக்களுக்கான தனி கொடி உருவாக்கப்பட வேண்டும் என்பதில் இந்த அமைப்புகள் உறுதியாக இருந்தன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு பிரதிநிதியாக இறுதியாகப் பங்கேற்றவர் ஆர்.என்.ரவி. தற்போதைய தமிழ்நாடு ஆளுநராக இருப்பவர்தான்.

ஆர்.என்.ரவி, நாகா அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் உருவாக்கிய ஒப்பந்தங்களும் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கின. நாகா அமைப்பினரிடத்தில் ஒரு ஒப்பந்தம் உருவாக்கி தந்ததாகவும் ஆனால் அதற்கு எதிரான அம்சங்களுடன் டெல்லியில் ஒரு ஒப்பந்தம் கொடுத்ததாகவும் கூறி நாகா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாகாலாந்து மாநில ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட போது அம்மாநில மக்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

பின்னரும் நாகா அமைப்புகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியாகவே நீடித்திருந்தது. இந்த நிலையில் திடீரென நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில், மத்திய அரசுடனான அமைதி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் மத்திய அரசுக்கு எதிரான போர் தொடங்குவோம் என அறிவித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பாக நாகாலாந்து மாநில அமைச்சரவை கூடி விவாதித்து டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்தவும் முடிவு செய்தது.

இதனடிப்படையில் முதல்வர் நெய்பியூ ரியோ தலைமையில் நாகாலாந்து அமைச்சர்கள் குழு டெல்லியில் முகாமிட்டது. டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து நாகாலாந்து நிலவரம் குறித்து விவாதித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+