டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.. வீட்டிலேயே இருங்க.. வெளியே போனால் கொரோனா உள்ளே வரும்- மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended Video

    இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக் டவுன் - பிரதமர் அறிவிப்பு

    கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்த 21 நாட்கள், அதாவது 3 வார ஊரடங்கின் போது அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும்.

    21 நாட்கள் லாக் டவுன் என்பது அதிக காலம்தான். ஆனால் அது உங்கள் மற்றும் உங்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு இந்தியரும் இந்த கொரோனா சவாலை வெற்றிகரமாக சமாளிப்பது மட்டுமல்லாமல் நெருக்கடியான இந்த நேரத்தில் வெற்றியும் பெற வேண்டும்.

     இத்தாலி, அமெரிக்காவில் கொரோனா பரவ இதுதான் காரணம்.. நாம் அதே தவறை செய்ய கூடாது.. மோடி தந்த வார்னிங்! இத்தாலி, அமெரிக்காவில் கொரோனா பரவ இதுதான் காரணம்.. நாம் அதே தவறை செய்ய கூடாது.. மோடி தந்த வார்னிங்!

    காவல் துறையினர்

    காவல் துறையினர்

    உங்களுக்காக பணியில் இருக்கும் காவல்துறையினரை நினைத்து பாருங்கள். இரவு பகல் பாராமல் அவர்களது குடும்பத்தினரை பற்றி நினைக்காமல் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பணியை செய்து வருகிறார்கள். சில நேரங்களில் மக்களின் கோபதாபத்தையும் அவர்கள் சந்திக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

    உயிர்களை காக்க

    உயிர்களை காக்க

    நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கொரோனா உள்ளே வந்துவிடும். எனவே உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். வீட்டுக்குள் இருக்கும் போது உங்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து பணியாற்றுவோருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், நோயியல் நிபுணர்கள் என உயிர்களை காக்க இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

    பிரார்த்தனை

    பிரார்த்தனை

    இந்த கடினமான காலங்களில் மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், வார்டு பாய்கள், சேவையாற்றும் மற்றவர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். நம் சமூகத்தையும் அக்கம்பக்கத்தினரையும் சாலைகளையும் பொது இடங்களிலும் சுகாதாரமாக வைத்திருக்கவும் நோயை ஒழிக்கவும் பணியாற்றுவோருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

    மருத்துவமனைகள்

    மருத்துவமனைகள்

    சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் இவர்கள் தங்கி 24 மணி நேரமும் சேவையாற்றி வருகிறார்கள். பெரியவர்ள், வியாபாரிகள், குழந்தைகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது. இதை தடுக்க ஒரே வழி சமூக விலகல்தான்.

    English summary
    PM Narendra Modi asks no one come from your house. Stay where you live.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X