டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி தலையிடனும்.. இதுபோல் "அங்கு" பேசியிருந்தால் மரண தண்டனை தான்... நடிகர் நசிருதீன் ஷா ஆவேசம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா பேசிய கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் விஷமத்தன கருத்துகள் பரவாமல் இருக்க பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என நடிகர் நசிருதீன் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் ஷர்மா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இஸ்லாமிய நாடுகளான சவூதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து நுபுர் ஷர்மாவை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டும் இதுவரை பிரச்னை முடிவுக்கு வரவில்லை.

பாஜக நுபுர் சர்மா சொன்னது தப்பில்ல..! நெதர்லாந்திலிருந்து பறந்து வந்த சப்போர்ட்பாஜக நுபுர் சர்மா சொன்னது தப்பில்ல..! நெதர்லாந்திலிருந்து பறந்து வந்த சப்போர்ட்

நடிகர் நசிருதீன் ஷா கருத்து

நடிகர் நசிருதீன் ஷா கருத்து

நுபுர் ஷர்மாவின் பேச்சு குறித்து பேசியுள்ள பிரபல நடிகர் நசிருதீன் ஷா, நுபுர் ஷர்மா இதுபோல் பாகிஸ்தான் அல்லது ஆஃப்கானிஸ்தானில் பேசியிருந்தால் மரண தண்டனை கொடுக்கப்படும். ஆனால் இங்கு லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டும் இதுவரை பெயரளவில் கண்டனங்கள் கூட இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் மன்னிப்பு கேட்பதில் நியாயமில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலையிட வேண்டும்

பிரதமர் தலையிட வேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு இந்த விவகாரத்தில் மேலும் விஷம் பரவுவதை தடுக்க வேண்டும். இதுபோன்ற மனிதர்களுக்கு கொஞ்சம் புத்தியை புகட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக கோரிக்கை வைக்கிறேன். பாஜகவினர் நுபுர் ஷர்மா பேச்சு குறித்து கண்டனம் தெரிவிக்கவே ஒருவாரம் ஆகிவிட்டது என்று விமர்சித்தார்.

சமூக வலைதளத்தின் பங்கு

சமூக வலைதளத்தின் பங்கு

இந்தியாவில் மறுபடியும் இதுபோல் வெறுப்பு பேச்சு பேசப்பட்டாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பற்றி பேசிவிட்டு ஒரு வருடம் சிறை தண்டனை பெறுவதும், இனப்படுகொலை செய்துவிட்டு கையில் ஒரு அடியை வாங்குவதும் முற்றிலும் நேர் எதிரானது. இங்கு நிறைய இரட்டை தர நிர்ணயம் மற்றும் ஏற்றதாழ்வுகள் உள்ளன. இதுபோன்ற விவகாரங்களில் வெறுப்பு மிகவும் அதிகமாக மக்களிடம் பரவுவதில் சமூக வலைதளங்களின் பங்கு அதிகமிருப்பதாக நசிருதீன் ஷா தெரிவித்தார்.

பாலிவுட் ஏன் பேசுவதில்லை?

பாலிவுட் ஏன் பேசுவதில்லை?

பாலிவுட்டின் முக்கிய நடிகர்களான ஷாரூக் கான், சல்மான் மற்றும் ஆமீர் கான் பேசாததற்கு, அவர்கள் வாழ்க்கையில் இழப்பதற்கு அதிகம் இருப்பது காரணமாக இருக்கும். ஏனென்றால் எனது சூழலில் அவர்கள் இல்லை. பாஜகவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் என்றும் நசிருதீன் ஷா விமர்சித்துள்ளார்.

English summary
Actor Naseeruddin shah Commented on Various Issue Created by BJP Government in India. Importantly, he want to stop the poison row over India through PM Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X