கார்கில் யுத்த வெற்றி நாள்- ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வீரவணக்கம்
டெல்லி: பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தில் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் இன்னுயிர் ஈந்து மகத்தான வெற்றியை பெற்ற தினம் இன்று.. ஆண்டுதோறும் ஜூன் 26-ந் தேதி கார்கில் யுத்த வெற்றி நாள் - கார்கில் விஜய் திவாஸ் என கடைபிடிக்கப்படுகிறது. கார்கில் யுத்தத்தில் எல்லைகளைக் காக்க வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இன்று நமது தேசம் வீரவணக்கம் செலுத்துகிறது.
Recommended Video
நாடு விடுதலை அடைந்த காலம் முதல் இந்தியா- பாகிஸ்தான் இடையே யுத்தங்கள் ஒரு தொடர் நிகழ்வாகும். 1999-ம் ஆண்டு இன்னொரு இந்தியா பாகிஸ்தான் யுத்தத்துக்கு காரணமாக இருந்தது கார்கில் ஆக்கிரமிப்பு.
1999-ம் ஆண்டு மே மாதத்தில் பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் துணையுடன் இந்தியாவுக்குள் ஆக்கிரமிக்க நுழைந்தது. இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் கார்கில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை கைது செய்து சித்ரவதைக்கு பின் படுகொலை செய்தது பாகிஸ்தான் ராணுவம்.

கார்கில் யுத்தம்
இதனைத் தொடர்ந்து கார்கில் யுத்த முனையில் இருநாடுகளின் ராணுவம் இடையே மோதல் வெடித்தது. 1999-ம் ஆண்டு ஜூன் 6-ல் இந்திய ராணுவம், கார்கில் பகுதியில் மிகப் பெரும் யுத்த நடவடிக்கையில் இறங்கியது. அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்தவர் பர்வேஷ் முஷாரப். ஒரு கட்டத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் யுத்த களத்தில் முழு வீச்சாக களமிறங்கின. பின்னர் பாகிஸ்தான் ஊடுருவி கைப்பற்றி இருந்த ஒவ்வொரு பகுதியாக இந்திய ராணுவ வீரர்கள் உயிரை தியாகம் செய்து மீட்டெடுத்தனர்.

கார்கில் வெற்றி தினம்
1999-ம் ஆண்டு ஜூலை 14-ல் கார்கில் யுத்தத்தில் பாரதம் வெற்றி பெற்றதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பிரகடனம் செய்தார். ர்கில் யுத்தத்தில் நமது ராணுவ வீரர்கள் 500க்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
கார்கில் யுத்தம் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ல் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. ஆகையால் அன்றைய தினம் கார்கில் யுத்த வெற்றி நாள் அல்லது கார்கில் விஜய் திவாஸ் என கொண்டாடப்படுகிறது.

ஜனாதிபதி, பிரதமர் மோடி
கார்கில் யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு தமது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளார். கார்கில் யுத்த வெற்றி நாளை முன்னிட்டு லடாக்கின் திராஸ், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் போர் நினைவுச் சின்னங்களில் ராணுவ தளபதிகள் ராணுவ மரியாதையுடன் வீரவணக்கம் செலுத்தினர்.
|
போர் நினைவு சின்னம்
மேலும் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் நாட்டின் முப்படை தளபதிகளும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அங்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் மலர் வளையம் வைத்து உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications