தீபிகா படுகோனேவுக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன்!
டெல்லி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சுஷாந்த் சிங் மரண வழக்கின் விசாரணையில் போதைப் பொருள் பயன்பாடு விவகாரம் வெளியே வந்தது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக களத்தில் குதித்தனர்.

கங்கனா ரனாவத் vs தீபிகா படுகோனே
இதில் நடிகை ரியா சக்கரபர்த்தி உள்ளிட பலரும் சிக்கினர். இந்த போதைப் பொருள் தடுப்பு விவகாரம் இப்போது கங்கனா ரனாவத் மற்றும் தீபிகா படுகோன் இடையேயான மோதலாக உருவெடுத்து நிற்கிறது.

தீபிகா மேலாளருக்கு சம்மன்
தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இப்போதைக்கு கரிஷ்மா பிரகாஷிடம் விசாரணை நடத்தப்படும்.

தீபிகா படுகோனேவுக்கும் சம்மன்
இந்த நிலையில் தற்போது தீபிகா படுகோனேவுக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே நடிகைகள் சாராஅலிகான், ரகுல்பிரீத் சிங்குக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.

ஜே.என்.யூ.-வுக்கு ஆதரவு
தமிழில் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ரஜினிகாந்தின் கோச்சடையான் படங்களில் நடித்தவர் தீபிகா படுகோனே. டெல்லியில் ஜே.என்.யூ. பேராசிரியர்கள், மாணவர்கள் மீது சில மாதங்களுக்கு முன்னர் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து ஜே.என்.யூவில் நடைபெற்ற போராட்டங்களில் நேரடியாக பங்கேற்று ஆதரவு தெரிவித்தவர் தீபிகா படுகோனே என்பது நினைவுகூறத்தக்கது.
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!










Click it and Unblock the Notifications