டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடு முழுவதும் தலித் பெண்களுக்கு எதிராக 7.3% குற்றங்கள் அதிகரிப்பு... உத்தரப் பிரதேசம்தான் டாப்!!

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய அளவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிகளவில் தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து இருப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டு இருக்கும் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் பதிவான பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 7.3% குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் 3,78,236 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதுவே, 2019ஆம் ஆண்டில் 4 லட்சமாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019ல் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே தாழ்த்தப்பட்ட பழங்குடிகளுக்கு எதிராக 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

தலித்களுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த வழக்குகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 11,829 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதற்கு அடுத்து ராஜஸ்தானில் 6,794 வழக்குகளும், பீகாரில் 6,544 வழக்குகளும் பதிவாகி உள்ளன. அதாவது நாட்டில் நடைபெற்று குற்றங்களில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 25.8 சதவீத குற்றங்கள் பதிவாகி இருக்கிறது.

 குடிசையில் சகோதரனுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்த 3 கயவர்கள் குடிசையில் சகோதரனுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்த 3 கயவர்கள்

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் ராஜஸ்தானில்தான் அதிகமாக பதிவாகி இருக்கிறது. இந்த மாநிலத்தில் மட்டும் 554 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 537 வழக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 510 வழக்குகளும் பதிவாகி உள்ளன. அந்த வகையில் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 26.5சதவீதம் அதிகரித்துள்ளது.

பாலியல்

பாலியல்

பழங்குடியின பெண்கள் பாதிக்கப்பட்ட வகையில் 8,257 குற்ற வழக்குகள் 2019ல் பதிவாகி இருக்கிறது. 2018ல் 6,528 வழக்குகள் பதிவாகி இருந்தன. மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 1,922 வழக்குகளும், ராஜஸ்தான் மாநிலத்தில் 1,797 வழக்குகளும், ஒடிசாவில் 576 வழக்குகளும் பதிவாகி உள்ளன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட வகையில் 358 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து சத்தீஸ்கரில் 180 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 114 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

பழங்குடியினர்

பழங்குடியினர்

பழங்குடியினருக்கு எதிரான சிறிய அளவிலான குற்றங்கள் என்ற வகையில் 1,675 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2019ல் பதிவான வழக்குகளில் 20.3 சதவீதம் வழக்குகள் பழங்குடியினர் பாதிக்கப்பட்ட வகையில் பதிவாகி இருக்கிறது.

குற்றம்

குற்றம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டில் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பெண்களில் 62.4 சதவீதம் அளவிற்கு குற்றங்கள் நடந்து இருப்பதாக பதிவாகி இருக்கிறது. இதுவே 2018ஆம் ஆண்டில் 58.8 சதவீதம் ஆக இருந்து இருக்கிறது.

தொடரும் பாலியல்

தொடரும் பாலியல்

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதேபோன்று ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடந்து அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கடத்தல்

கடத்தல்

பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களில் முதலிடம் வகிப்பது கணவர் அல்லது அவர்களது உறவினர்களால் பாதிக்கப்பட்டதுதான். அந்த வகையில் 30.9% வழக்குகள் பதிவாகி உள்ளன. பெண்களை தூண்டும் வகையில் 21.8% குற்றங்களும், கடத்தல் தொடர்பாக 21.8% வழக்குகளும், பாலியல் தொடர்பாக 7.9% வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன.

English summary
NCRB data shows crime against women up 7.3%; Uttar Pradesh top in the list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X