டெல்லி வரை போகும் திமுக.. "மீண்டும்" செக் வைக்க ரெடியான ஆளுநர் ரவி.. முதல்வர் ஸ்டாலின் போடும் கணக்கு
சென்னை: நீட் தேர்வு விலக்கை எப்படியாவது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக டெல்லியில் காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் ஆளுநரும் தனது தரப்பில் முக்கியமான பிளான் ஒன்றில் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி இருந்தார். ஆளுநர் திருப்பி அனுப்பிய இந்த மசோதாவை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் அவையில் தாக்கல் செய்து நிறைவேற்றினார்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு திமுக அரசு அனுப்பியிருக்கும் நிலையில், இந்த முறை கவர்னர் கால தாமதம் செய்யமாட்டார் ; குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஆளும் கட்சி தலைமைக்கு இருக்கிறது.

நீட் விலக்கு மசோதா
ஆனால், நீட் விலக்கு விசயத்தில் திமுகவின் எதிர்பார்ப்பு இப்போதைக்கு நிறைவேறப் போவதில்லை என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் செக் வைக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினால் அதே மசோதாவை பேரவையில் நிறைவேற்றி இரண்டாவது முறையாக அனுப்பினால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்றே சட்டம் சொல்கிறது.

ஆளுநர் பிளான்
இதில் ஆளுநர் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் எதுவும் சட்டத்தில் சொல்லப்படாததால் அதை வைத்தே மசோதாவை கிடப்பில் போட்டு விடுகிறார்கள் கவர்னர்கள். இந்த விவகாரத்தில், மத்திய அரசு அறிவுறுத்தினால் மசோதாவை குடியரசு தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைப்பார். சர்ச்சைகளிலிருந்து கவர்னரை விடுவிக்கும் வகையில், இந்த அறிவுறுத்தல்களை கவர்னர் ரவிக்கு டெல்லியில் இருந்து உத்தரவு வரலாம்.

ஜனாதிபதி என்ன செய்வார்?
அப்படி ஒரு உத்தரவு வந்து மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் போது இந்த சட்ட மசோதாவை ஜனாதிபதி கிடப்பில் போட்டு விட முடியும். அதாவது இங்கே கிரீன் லைட் கிடைத்தாலும் மேலே ரெட் லைட் போடப்பட வாய்ப்பு உள்ளது. அதனால், கவர்னரிடமிருக்கும் இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கச் சொல்லி விட்டு, ஜனாதிபதி மூலமாக அந்த மசோதாவை கிடப்பில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் பாஜக தரப்பில் உலாவிக் கொண்டிருக்கிறது.

திமுகவின் இமேஜ்
ஆனால் இன்னொரு பக்கம் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் டெல்லியில் சில முயற்சிகளை திமுக தரப்பு எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. நீட் விலக்கு விவகாரம் திமுகவின் இமேஜ் சம்மந்தப்பட்டதால் குறிப்பாக முதல்வர் ஸ்டாலினின் இமேஜ் சம்மந்தப்பட்டதாகவும் உள்ளது. அதாவது சொல்வதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம் என்கிற திமுகவின் முழக்கத்தின் மீதான இமேஜ் சம்மந்தப்பட்டதாகவும் உள்ளது.

டெல்லி திமுக
இதனால்தான் டெல்லியில் திமுக சில முயற்சிகளை செய்து வருகிறதாம். இந்த முயற்சி ஒருவேளை வெற்றியடைந்தால் மட்டுமே நீட் விலக்கில் ஒரு ஒளி பிறக்கும் என்கிறார்கள். இதற்காக இன்னொரு பக்கம் சட்ட போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் நீண்ட சட்ட போராட்டத்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் கணக்கு போட்டுள்ளாராம். நீட் தொடர்பாக ஏற்கனவே சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருப்பதால், சட்ட போராட்டத்திற்கும் திமுக தயாராக இருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications