கண்களை கட்டி இரவு முழுக்க அடைத்து வைத்தனர்! நீட் போராட்டத்தில் உணவு கொடுத்தவரிடம் அத்துமீறிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் போராட்டத்தின்போது மாணவர்களுக்கு உணவு அளித்த தன்னார்வலர் முகமது ஜுனைத் என்பவரை போலீசார் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இரவு முழுக்க தன்னை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாகவும் முகமது ஜுனைத் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் மாணவர் போராட்டத்தில் தன்னார்வலராக செயல்பட்டவர் முகமது ஜுனைத். இவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு உணவுகளை இலவசமாக கொடுத்தார். இதற்கிடையே டெல்லி போலீசார் சிலர் கண்களைக் கட்டி அழைத்து சென்று இரவு முழுவதும் அடைத்து வைத்து விசாரணை நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், தனது குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

neet protest neet protest

என்ன நடந்தது?

கடந்த ஜூலை 24ஆம் தேதி இரவு சுமார் 10.50 மணி அளவில் அவரை நாய் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். பிறகு நள்ளிரவு 12.15 மணியளவில் நண்பர்களுடன் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது தான் போலீசார் என்று சொல்லிக் கொண்டு சிலர் தன்னை பிடித்து சென்றதாக அவர் கூறுகிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மருத்துவமனையிலிருந்து 50 முதல் 60 மீட்டர் தூரம் வந்தவுடன் சிலர் வாகனங்களை குறுக்கே நிறுத்தினர். முதலில் எங்களை கொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்தோம். அதன்பிறகு அவர்கள் தங்களை டெல்லி போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். அடையாள அட்டையை கூட காட்டினார்கள். இதையடுத்து, எனது கண்களை கட்டிவிட்டு எங்கோ அழைத்து சென்றனர்.

விசாரணை

எங்களை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. இரவு முழுவதும் அங்கேயே வைத்திருந்தனர். அவர்களுக்கு தேவையான பதிலை சொன்னால் 10 நிமிடத்தில் விட்டுவிடுவோம் என்றனர். போராட்டத்தில் வழங்கப்பட்ட உணவுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இவ்வளவு உணவை எப்படி வழங்குகிறீர்கள்? பணம் எங்கிருந்து வருகிறது?' என்று அவர்கள் கேட்டனர். தன்னார்வலர்களே இணைந்து ஏற்பாடு செய்கிறார்கள். சிலர் ஆன்லைன் உணவு செயலிகள் மூலம் ஆர்டர் செய்கிறார்கள். மற்றவர்கள் உணவு, தண்ணீர் கொண்டு வருகிறார்கள் என்று விளக்கினேன்" என்றார்.

தான் சொன்ன பதிலை எல்லாம் கேட்ட போலீசார் பிறகு தன்னை உத்தரகண்ட் மாநிலத்தின் முசோரி பகுதியில் இறக்கிவிட்டதாகவும், அங்கிருந்து வாடகை கார் மூலம் மீண்டும் டெல்லி திரும்பியதாகவும் ஜுனைத் கூறினார். தனக்கு எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை என்று சொல்லும் ஜுனைத், போராடும் மாணவர்களுக்கு உணவு கொடுப்பது குற்றமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து- முஸ்லீம்

அவர் மேலும், "இதுநாள் வரை என் மீது ஒரு குற்ற வழக்குகூட இல்லை. நான் குற்றவாளி அல்ல. மாணவர்களுக்காக மட்டுமே நாங்கள் போராடுகிறோம். போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உணவு வழங்கியது பெரியளவில் வளர்ந்தது. அதனால் தான் என்னை குறிவைக்கிறார்கள். கல்விக்காக இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் எங்களை தடுக்க முயல்கிறார்கள்.

நான் கடந்த ஜூன் 20 முதல் வீட்டுக்கு கூட செல்லவில்லை.. ஜந்தர் மந்தரிலேயே இருந்து மாணவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி வந்தேன். பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதும், தண்ணீர் கொடுப்பதும் குற்றம் என்றால், அந்த குற்றத்தை ஆயிரம் முறை செய்ய நான் தயாராக இருக்கிறேன். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துக்காக என் தியாகம் உதவுமானால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்" என்றார்.

விளக்கம்

போராட்டம் முடிந்த பிறகு ஜுனைத்தை கரப்பான் பூச்சி கட்சி கைவிட்டுவிட்டதாகவும் அவருக்கு எந்தவொரு உதவியும் வழங்கவில்லை என்றும் இணையத்தில் தகவல்கள் பரவின. இருப்பினும், அதற்கு ஜுனைத் மறுப்பு தெரிவித்துள்ளார். கரப்பான் பூச்சி கட்சி தலைமை தன்னுடன் நல்ல தொடர்பிலேயே இருப்பதாகவும் இந்த இயக்கம் பற்றி தவறான தகவல்களை பரப்ப சிலர் முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சி செய்தித் தொடர்பாளர் ரத்னா சிங்கும் இது தொடர்பாக விளக்கம் தந்துள்ளார். ஜுனைத் தொடர்பாக பரவி வரும் செய்திகள் வதந்திகள் என்று தெரிவித்தார். ஜுனைத் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தன்னார்வலர்கள் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

டெல்லி போலீசார்

அதேநேரம் டெல்லி போலீசாரும் முகமது ஜுனைத் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளனர். ஜுனைத் அல்லது அவரது குடும்பத்தினரிடம் டெல்லி போலீசார் எந்தவொரு விசாரணையையும் நடத்தவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+