30 நிமிடம் இல்லை.. 3 நிமிடம் தான்.. விமான நிலையங்களில் இமிக்ரேஷன் வேகமானது எப்படி? முழு விவரம்
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து பயணிகள் உடனே வெளியேறும் வகையில் புதிய ஃபாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் 30 நிமிடங்களில் இருந்து வெறும் ஒரு சில வினாடிகளில் விமான நிலையத்தை விட்டு ஈஸியாக வெளியேறலாம்.. டெல்லி விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்ட ஃபாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன், சென்னை உள்பட மற்ற 20 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் உள்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 22ம் தேதி முதல் புறப்பாடு மற்றும் வருகையின் போது பயணிகள் எளிதாக செல்லும் வகையில் புதிய ஃபாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டப்படி 'முன் சரிபார்க்கப்பட்ட' விமானப் பயணிகள் எளிதாக விமான நிலையத்திற்குள் சோதனையின் போது நுழைய முடியும். அதேபோல் சோதனைகள் முடிந்து மிக வேகமாக வெளியேற முடியும். இதற்காக பயோமெட்ரிக்ஸ் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.
21 விமான நிலையங்கள்: இந்த திட்டத்தின் டெல்லியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் நிலையில், பயணிகள் வேகமாக விமான நிலையங்களில் வெளியேறுகிறார்கள். இந்த திட்டம் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சின், அகமதாபாத் ஆகிய ஏழு முக்கிய விமான நிலையங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் உள்ள 21 விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
டெல்லி அதிகாரி விளக்கம்: இதுபற்றி டெல்லியில் மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், "சர்வதேச பயணிகளின் விருப்பமான முக்கியமான நாடாக இந்தியா மாறி வருகிறது. அப்படி வரும் பயணிகளின் பயண அனுபவம் தடைகள் ஏதுவும் இல்லாத மற்றும் சிறப்பானதாக மாற்றுவதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 'தகுதியான பயணிகள்', இ-கேட் மூலம் எளிதாகவும் விரைவாகவும் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் வழக்கமான நீண்ட வரிசைகளைத் தவிர்க்கலாம்.
சென்னை விமான நிலையம்: இந்தத் திட்டம் விரைவில் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா மற்றும் பிற நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. இதன் கீழ், முன் விமானங்களில் வரும் 'சரிபார்க்கப்பட்ட' இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமக்கள் (OCI) ஆகியோர் ஃபாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் சிஸ்டம் மூலம் சில நொடிகளில் விமான நிலையங்களை விட்டு வெளியேறுவார்கள்" என்றார்.
புதிய ஃபாஸ்ட்-ட்ராக் இமிக்ரேஷன் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது: இந்த FTI-TTP திட்டம் டெல்லி விமான நிலையத்தில் வெற்றிகரமாக செயல்பாட்டில் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 18,400 நபர்கள் (இந்திய பாஸ்போர்ட் மற்றும் OCI அட்டை வைத்திருப்பவர்கள்) பதிவு செய்திருக்கிறார்கள்.. இந்த திட்டத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே எளிதாக இமிக்ரேஷன் சோதனையை செய்து வெளியேற முடியும். இந்த FTI-TTP திட்டம் ஆன்லைனில் செயல்படுத்தப்படுகிறது.
பயோமெட்ரிக்ஸ் கட்டாயம்: இந்த திட்டத்தில் இணையும் பயணிகள், தேவையான சரிபார்ப்புகளுக்கு பிறகு, இ-கேட்கள் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இதில் தேவையான அனைத்து சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின்னரே, குறிப்பிட்ட பயணிகள் 'நம்பகமான பயணிகளின்' என்ற வொயிட் லிஸ்டில் சேர்க்கப்படுவார்கள். இதன்படி இ-கேட்கள் வழியாகச் செல்லும் 'நம்பகமான பயணி'களின் பயோமெட்ரிக்ஸ் ஏற்கனவே வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அல்லது விமான நிலையங்களில் சேகரிக்கப்பட்டிருக்கும்.
இ-கேட் எப்படி வேலை செய்யும்: எனவே பதிவு செய்யப்பட்ட பயணிகள் இ-கேட்களை அடையும் போது, அவர்கள் தங்கள் விமானத்தின் விவரங்களைப் பெற விமான நிறுவனங்கள் வழங்கிய போர்டிங் பாஸை ஸ்கேன் செய்வார்கள். பின்னர் கடவுச்சீட்டும் ஸ்கேன் செய்யப்பட்டு, பயணிகளின் பயோமெட்ரிக்ஸ் அங்கீகரிக்கப்படும். பின்னர் பயணியின் அடையாளம் கண்டறியப்பட்டு, பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்யப்பட்டவுடன், இ-கேட் தானாகவே திறக்கப்படும். இதன் மூலம் விரைவாக பயணிகள் செல்ல முடியும்.
இதற்கு எப்படி விண்ணப்பிப்பது: இதற்கு தகுதியான நபர்கள் www.ftittp.mha.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு தேவையான விவரங்களை வழங்க அந்த இணையதளம் கேட்கும்.. அதனை ஒவ்வொன்றாக சரியாக வழங்க வேண்டும். அப்படி வழங்கப்படும் விவரங்கள் அனைத்தையும், இமிக்ரேஷன் அலுவலகத்தால் சரிபார்க்கப்படும். இமிக்ரேஷன் அதிகாரிகளால் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, சர்வதேச விமான நிலையங்கள் அல்லது அருகிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் அவர்களின் பயோமெட்ரிக்ஸை வழங்க வேண்டும் என்று அவருக்கு இமிக்ரேஷன் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்படும். அங்கு சென்று பயோமெட்ரிக்கை பதிவு செய்ய வேண்டும். அப்படி நடந்து விட்டால் நீங்கள் நம்பகமான பயணிகள் லிஸ்டில் வந்து விடுவீர்கள்.. எளிதாக விமான நிலையங்களில் ஒரு சில நொடிகளில் வெளியேற முடியும்.
யாருக்கு பொருந்தும்: இந்த எஃப்டிஐ பதிவு (நம்பகமான பயணி என்பது) அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் வரை என எது முதலில் வருகிறதோ, அது வரை செல்லுபடியாகும். பயோமெட்ரிக்ஸ் வழங்குவது கட்டாயம் என்றும், FTI-TTP க்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்காவது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்குத்தான் இந்த திட்டம் பொருந்தும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்: இமிக்ரேஷன் செயல்முறைகளில் மனிதர்களின் தலையீட்டைக் குறைக்கும் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும், முதல் கட்டத்தில் இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அடுத்த கட்டத்தில் வெளிநாட்டினர் சேர்க்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி விவரங்களை அறிய மத்திய உள்துறை அமைச்சகம் ஹெல்ப் டெஸ்க் மின்னஞ்சல் ஐடியையும் பகிர்ந்துள்ளது: [email protected] என்ற முகவரியில் சந்தேகங்களை அறியலாம்.












Click it and Unblock the Notifications