டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள்.. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள புதிய வழிகாட்டுதல்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு உடனே சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். அதேநேரம் லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். அவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Mild Corona Symptoms உடன் Home Isolation-ல் இருப்பவர்களுக்கு New Guidelines | Oneindia Tamil

    கொரோனாவின் லேசான பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

    கொரோனாவால் லேசான பாதிப்புக்கு ஆளானவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளலாம். 7 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் நீடித்தால் டாக்டரை கலந்தாலோசித்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

    மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி காலமானார் மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி காலமானார்

    மருத்துவர்கள் ஆலோசனை

    மருத்துவர்கள் ஆலோசனை

    வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்ட கொரோனா நோயாளிகள் சூடான நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும் அல்லது 2 முறை ஆவி பிடிக்க வேண்டும்.
    60 வயதுக்கு மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நாள்பட்ட நுரையீரல் அல்லது கல்லீரல் அல்லது சிறுநீரக நோய், பெருமூளை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவாலும் பாதிக்கப்படுகிற போது, மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுத்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை இன்றி தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது. ஆக்சிஜன் செறிவு குறைந்தால், மூச்சுத்திணறலால் அவதியுற்றால் உடனே மருத்துவமனையில் சேர்ந்துவிட வேண்டும்.

    தினமும் நான்கு முறை

    தினமும் நான்கு முறை

    தினமும் 4 முறை பாரசிட்டமால் 650 மி.கி. மாத்திரை எடுத்தும் காய்ச்சல் குறையாதபோது, டாக்டரை கலந்தாலோசிக்க வேண்டும். அவர் தினமும் 2 முறை நாப்ராக்சன் 250 மி.கி. மாத்திரையை எடுக்க பரிந்துரைக்கலாம்.

     ஹைட்ராக்சிகுளோரோகுயின்

    ஹைட்ராக்சிகுளோரோகுயின்

    கொரோனா நோயாளியை வீட்டில் கவனிப்போர், நெருங்கிய தொடர்பில் இருப்போர் நெறிமுறைகள்படி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். நோயாளிகள் வீட்டில் நல்ல காற்றோட்டமுள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எப்போதும் அவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நோயாளியும், பராமரிப்பாளரும் என்-95 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது.

    புற்றுநோயாளிகள்

    புற்றுநோயாளிகள்

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எச்.ஐ.வி. நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் மருத்துவர்களின் மதிப்பீட்டுக்குப் பின்னர்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படுவார்கள். நோயாளிகள் வீட்டில் நன்றாக ஓய்வு எடுப்பதுடன் நிறைய பானங்களை குடிக்கலாம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நோயாளிகள் உடல்நிலை மோசமடைந்தால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

    10 நாட்கள் தனிமை

    10 நாட்கள் தனிமை

    வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் அறிகுறிகள் தோன்றி 10 நாட்களான பின்னர் அல்லது அறிகுறியற்றவர்கள் கொரோனா மாதிரி எடுக்கப்பட்ட 10 நாட்களுக்கு பின்னர், 3 நாட்கள் காய்ச்சல் இல்லாத நிலையில் வெளியே வந்துவிடலாம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டது முடிவு அடைந்தபின்னர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை" இவ்வாறு புதிய வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    People with mild corona symptoms can be isolated at home. The central government has issued new guidelines for them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X