குழந்தையுடன் பைக்கில் சென்றால்.! இது கட்டாயம்? மத்திய அரசு புதிய பிளான்.!
டெல்லி: குழந்தைகளை ஏற்றிச் செல்லும் போது மோட்டார் சைக்கிளை மணிக்கு 40 கி.மீ. வரையிலான வேகத்தில் இயக்க வேண்டும் என மத்திய அரசு புதிய யோசனையை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று ஒரு வரைவு அறிவிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்து ஓட்டிச் செல்லும் போது வாகனத்தை மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் இயக்க வேண்டும்.
அந்த வேகத்தை அதிகரிக்கக் கூடாது. அவ்வாறு குழந்தையை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து கூட்டிச் செல்லும் போது குழந்தைக்கு கட்டாயம் ஹெல்மெட் அணிவித்திருக்க வேண்டும். குழந்தையின் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பிரத்யேக பெல்ட்
பிரத்யேக பெல்ட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் குழந்தையை வாகனம் ஓட்டுபவருடன் இணைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள், எடை குறைவானதாகவும், எளிதில் சரி செய்யக் கூடியதாகவும் நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என அந்த வரைவு அறிக்கையை தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோசனை
இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் யோசனைகளையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்குமாறு தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் இந்த திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.

பின்சீட்டில் குழந்தை
ஏற்கெனவே வாகனங்களை இயக்கும் போது அதை இயக்குவோருக்கும் பின் சீட்டில் அமர்ந்திருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வருவோரிடம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை அழைத்து செல்லும் போது அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.

தூங்கும் குழந்தைகள்
மேலும் சிறிய குழந்தைகள் பின் சீட்டில் அமர வைத்து அழைத்துச் செல்லும் போது அவர்கள் தூங்கி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வேகமாக செல்லும் போது குழந்தைகள் காற்றின் வேகத்தால் நிலையாக உட்கார முடியாத நிலையும் உள்ளது. இதனால்தான் மேற்கண்டவாறு வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

என்ன முடிவு
தற்போது 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளை அதற்கான பிரத்யேக பெல்ட் அணிவித்து தங்கள் மார்போடு அனைத்து பாதுகாப்பாக அழைத்து செல்வது அதிகரித்துள்ளன. இந்த வரைவு அறிக்கைக்கு மக்கள் எந்த மாதிரியான கருத்துகளை தெரிவிப்பார்கள் என தெரியவில்லை. இருந்தாலும் நம் பாதுகாப்பு கருதி மத்திய அமைச்சகம் இப்படி ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications