Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபத்து.." சின்ன விமான விபத்து.. அதன் பிறகு தொடங்கும் 3ஆம் உலக போர்! 2023இல் காத்திருக்கும் பேரழிவு

மூன்றாம் உலக போர் குறித்து 'புதிய நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் நபர் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 'புதிய நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் நபர் மூன்றாம் உலகப் போர் எப்போது நடக்கும் என்பது குறித்தும் அதில் எந்த நாடுகளுக்குத் தொடர்பு இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள யாருக்குத் தான் பிடிக்காது. அதேபோல வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்தும் பலரும் கணித்து வருகிறார்கள்.

வரும் காலத்தைக் குறித்த கணிப்புகள் என்று வரும் போது, ​​பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸை விட வேறு யாரும் துல்லியமாக இருந்தது இல்லை. அவர் 450 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்தாலும், அவரது பல கணிப்புகள் உண்மையாகவே இருந்துள்ளது.

 நோஸ்ட்ராடாமஸ்

நோஸ்ட்ராடாமஸ்

அந்த காலத்தில் மருத்துவராகவும் இருந்த நோஸ்ட்ராடாமஸ் வரும் காலம் குறித்துக் கணிக்கும் வகையில் மொத்தம் 942 கவிதைகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் துல்லியமாகக் கணித்துள்ளார். இவர் சரியாகக் கணித்தது எல்லாம் சிறிய விஷயங்கள் இல்லை.. இரண்டாம் ஹென்றியின் மரணம், லண்டனின் பெரும் தீ, ஹிட்லர் ஆரம்பித்த போர், கென்னடி படுகொலை உள்ளிட்ட வரலாற்றை மாற்றிய பல நிகழ்வுகள் குறித்து அவர் மிகத் துல்லியமாகவே கணித்துள்ளார்.

 பாபா வாங்கா

பாபா வாங்கா

இன்று இந்தளவுக்குத் துல்லியமாக என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் நபர்கள் மிகக் குறைவு. இந்த வரிசையில் கடைசியாக வந்தவர் பாபா வங்கா.. இவரது இயற்பெயர் வங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா.. வரும் காலத்தைக் குறித்து பாபா வாங்காவும் பல துல்லிய கணிப்புகளை வெளியிட்டார். அவரால் எப்படி இந்தளவுக்குத் துல்லியமாகக் கணிக்க முடிந்தது என்பது இன்னுமே கூட பலருக்கும் புரியாத மர்மமாகவே உள்ளது. 1996இல் அவர் மறைந்தாலும் அவரது கணிப்புகள் துல்லியமாகவே இருந்துள்ளது.

 புதிய நோஸ்ட்ராடாமஸ்

புதிய நோஸ்ட்ராடாமஸ்

இத்துடன் வரும் காலத்தைக் குறித்துச் சொல்வோரின் காலம் முடிந்துவிட்டதாகப் பலரும் நினைக்கலாம்.. ஆனால், அப்படியில்லை. இன்னுமே கூட வரும் காலத்தைக் குறித்து துல்லியமாகக் கணிக்கும் நபர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படி துல்லியமாகக் கணிப்பவர்களில் ஒருவர் கிரேக் ஹாமில்டன்-பார்க்கர். கடந்த ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணி மரணமடைந்திருந்தார். அதை முன்னரே துல்லியமாகக் கணித்த இவரை, நெட்டிசன்கள் 'புதிய நாஸ்ட்ராடாமஸ்' என்றே அழைக்கிறார்கள்.

 மூன்றாம் உலகப் போர்

மூன்றாம் உலகப் போர்

இவர் இப்போது அடுத்த உலகப் போர் குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார். தைவானில் நடக்கும் ஒரு விமான விபத்து இந்த ஆண்டு 3ஆம் உலகப் போரின் தொடக்கமாக இருக்கும் என்று அவர் கணித்துள்ளார். அதாவது இந்தாண்டு இரண்டு விமானங்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்கள் மோதி விபத்து ஏற்படும் என்றும் இது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் மூன்றாம் உலகப் போருக்குத் தொடக்கமாக இருக்கும் என்று ஹாமில்டன்-பார்க்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 எப்போது ஏற்படும்

எப்போது ஏற்படும்

இந்த விபத்து மிகப் பெரிய மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் இதில் தொடர்புடையதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கூறுகையில், "தைவான் விவகாரத்தில் ஏற்படும் மோதலாக இது இருக்கும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.. இது இந்த ஆண்டு நடக்கும் என்று நான் நினைக்கிறேன். சில தற்செயலான விபத்துகள் இந்தாண்டு நடக்க வாய்ப்புள்ளது. அது மிக மோசமான மோதலுக்கு வழிவகை செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.

 உக்ரைன் விவகாரம்

உக்ரைன் விவகாரம்

வரும் காலத்தில் ஏற்படும் போருடன் ஒப்பிடுகையில் ரஷ்யா-உக்ரைன் போர் சிறியது தான். இது ஒரு தீவிரமான பிரச்சனையாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். உக்ரைன் விவகாரத்தை விட இது மிக முக்கியமானது. இந்த விஷயத்தில் சீனா ஆதரவு நிலைப்பாட்டை ரஷ்யா எடுக்கும். சீனாவுக்கு ரஷ்யா முழு ஆதரவைக் கொடுக்கும் என்பதால் நிலைமை மேலும் மோசமாகும்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+