கட்சியை பலப்படுத்த போறோம்... ராகுலிடம் இதுதாங்க பேசினோம்.. புதிய தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி
டெல்லி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து ராகுல் காந்தியிடம் ஆலோசித்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரான கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருநாவுக்கரசர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக் குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கே.எஸ்.அழகிரி தமிழகம், புதுச்சேரியில் வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற பாடுபடுவேன் என்று கூறினார்.
இந் நிலையில் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இது குறித்து அவர் கூறியதாவது:டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருக்கிறோம். தற்போதைய அரசியல் சூழ்நிலை, தேர்தல் குறித்து விவாதித்துள்ளோம்.
கட்சியை பலப்படுத்த போறோம்... ராகுலிடம் இதுதாங்க பேசினோம்.. புதிய தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி #KSAlagiri #RahulGandhi pic.twitter.com/Ezqj7XWAzn
— Oneindia Tamil (@thatsTamil) February 4, 2019
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்கியிருப்பதை பற்றி ராகுல் காந்தியிடம் எடுத்துக் கூறியிருக்கிறோம். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்பவர்கள்.
அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக அவர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்குவது, ஊதியத்தை பிடித்தம் செய்வது, பணியிடமாற்றம் செய்வது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் தமிழக அரசு செய்துள்ளது என்று கூறினார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications