கொரோனா, மங்கி பாக்ஸ் என தொற்று நோய்கள் அதிகரிக்க இது தான் காரணம்! அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள்
டெல்லி: உலகெங்கும் கொரோனா வைரஸ், மங்கி பாக்ஸ் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் விளக்கி உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் உலக நாடுகளை கொரோனா வைரஸ் மிரள வைத்து. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை எந்தவொரு நாடும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
கொரோனாவில் இருந்து உலகம் மெல்ல மீண்டு வரும் நிலையில், இப்போது மங்கி பாக்ஸ் உலக நாடுகளை ஓட வைக்கிறது. ஐரோப்பிய நாடுகள் அந்த மங்கி பாக்ஸ் பாதிப்பால் பெரும் பாதிப்பைச் சந்தித்து உள்ளது.

என்ன காரணம்
கடந்த 3 ஆண்டுகளில் மட்டுமே இந்த நிலைமை என்று இல்லை. சார்ஸ், பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எனக் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோல தொற்று நோய் பரவலின் வேகம் அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே இதுபோல தொற்றுநோய் வேகமாகப் பரவுவதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் இடையே உள்ள மோசமான தொடர்பை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்று பரவும் தொற்று நோய்களில் 58% பருவநிலை மாற்றம் காரணமாகவே மோசமடைந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பருவநிலை மாற்றம்
கடைசி இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே ஐரோப்பாவின் சில பகுதிகள் வரலாறு காணாத வெப்பத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. அதேநேரம் உலகின் மற்ற பகுதிகள் அதி தீவிர கனமழையை எதிர்கொண்டு வருகிறது. இடையில் அமெரிக்காவில் ஒரு பக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் காட்டுத்தீ விட்டு விளாசி வருகிறது. இதனால் லட்சக் கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆய்வு
இப்படி திடீர் திடீரென ஏற்படும் வானிலை மாற்றங்களுக்குக் காலநிலை மாற்றமே முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில், நேச்சர் க்ளைமேட் சேஞ்ச் இதழில் இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் பருவநிலை மாற்றம் காரணமாகச் சுற்றுச்சுழலில் ஏற்படும் மாற்றங்களே நோய்க்கிருமிகள் வேகமாகப் பரவ வழிவகுத்தன.

குறைக்க வேண்டும்
கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைத்து பருவநிலை மாற்றத்தைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இல்லையென்றால் வரும் காலத்திலும் நோய்க் கிருமிகள் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தால், நமக்கு ஏற்படும் நோய்ப் பாதிப்புகளின் தாக்கமும் அதிகரிக்கும். இதனால் வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டு உள்ளது.

பாதிப்புகள்
வேகமாகப் பரவும் தொற்று நோய்களைத் தவிர, ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற லேசான நோய்களுக்கும் பரவ நிலை மாற்றத்திற்கும் இடையே உள்ள தொடர்பும் ஆராயப்பட்டது. மொத்தம் 286 நோய்கள் ஆய்வு செய்யப்பட்டதில் அவற்றில் 223 நோய்கள் காலநிலை மாற்றத்தால் மோசமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
Recommended Video

திகிலூட்டுகிறது
இது தொடர்பாக டாக்டர் கார்லோஸ் டெல் ரியோ கூறுகையில், "இந்த ஆய்வு முடிவுகள் திகிலூட்டுகிறது. காலநிலை மாற்றம் மற்றும் வைரஸ் பரவலுக்கு இடையே இருக்கும் தொடர்பை இது விளக்குகிறது. எனவே, நோயை எதிர்க்க மருந்துகளைக் கண்டுபிடிக்க நாம் காட்டும் அதே முக்கியத்துவத்தைக் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதிலும் கொடுக்க வேண்டும். அப்போது தான், நோய்க் கிருமி பரவல்களைப் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications