மோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டேன்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரபர தகவல்
டெல்லி: பிரதமர் பதவிக்காக நரேந்திர மோடிக்கு எதிராக தாம் முன்னிறுத்தப்பட்டது உண்மைதான் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரதமர் பதவியைப் பெறுவது எனது நோக்கம் அல்ல.. கட்சிக்கும் கொள்கைக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம் எனவும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான நாக்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்பியானவர்.
2019, 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் காலங்களில் பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி பெயரும் அடிபட்டது. ஆர்.எஸ்.எஸ், நிதின் கட்கரியை முன்னிறுத்த விரும்பியது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ். இல்லாமல் பாஜக தனித்தே செயல்பட முடியும் என தற்போதைய பாஜக தலைவர் ஜேபி நட்டா, லோக்சபா தேர்தலின் போது விமர்சித்தார்.
மேலும் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரியை தோற்கடித்தாக வேண்டும்; அவரை பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பாஜக மேலிடத் தலைவர்களே வரிந்து கட்டிக் கொண்டு குழிபறித்த கதையும் நடந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் மோடி- அமித்ஷா கூட்டணியில் இருந்து விலகியவராகவே நிதின் கட்கரி இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், வெளிப்படையாகவே பிரதமர் பதவிக்கான போட்டி குறித்து தெரிவித்துள்ளார் நிதின் கட்கரி. பிரதமர் பதவிக்கு தம்மை ஆதரிக்க சிலர் முன்வந்தனர்; ஆனால் பிரதமர் பதவியின் மீது எனக்கு விருப்பம் இல்லை. என் நோக்கமும் அது அல்ல. நான் கொண்ட கொள்கைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதனால்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இணையவில்லை என்றார்.
2019-ம் ஆண்டு தேர்தலின் போதும் நிதின் கட்கரியிடம் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கிறீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அப்போது, நாங்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பின்னால்தான் நிற்கிறோம். நான் பிரதமர் பதவிக்கான போட்டியிலேயே இல்லை. நான் கட்சியின் தொண்டன் அவ்வளவுதான் என கூறியிருந்தார்.
ஆங்கில ஊடகங்கள் சில நடத்திய கருத்து கணிப்பிலும் கூட, அமித்ஷா- யோகி ஆதித்யநாத்துக்கு அடுத்ததாக பாஜகவில் பிரதமராகக் கூடிய சாத்தியம் நிதின் கட்கரிக்குதான் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications