சும்மா வரல சிஎம் பதவி..பீகார் அரசியலை கைக்குள் வைத்திருக்கும் நிதிஷ்! 10 முறை பதவி கிடைத்தது எப்படி?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி பெருவெற்றி பெற்ற நிலையில் பீகாரில் பத்தாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றி இருக்கிறார் நிதிஷ்குமார். யூடர்ன் அரசியல்வாதி என பெயர் பெற்ற நிதீஷ் குமார் பலமுறை கூட்டணி மாறி இருந்தாலும், அந்த கூட்டணிகள் அவரை முதல்வராக்கி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அதிக முறை முதல்வரானவர் (10 முறை) அதிக காலம் முதல்வராக இருந்தவர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் (19 ஆண்டுகள்) இடம் பிடித்துள்ளார் நிதீஷ் குமார்.
பீகார் மாநிலத்தில் பத்தாவது முறையாக முதல்வராக பதவியேற்று இருக்கிறார் நிதீஷ் குமார். பாஜகவுடன்ம் என்டிஏ கூட்டணியில் இணைந்தும், காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்தும் பலமுறை அவர் முதல்வராக இருக்கிறார்.
சொல்லப்போனால் தற்போது இந்தியா முழுவதும் இருக்கும் இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் நிதிஷ்குமார் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிலிருந்து முதல் ஆளாக வெளியேறியவரும் நிதிஷ்குமார் தான்.

நிதீஷ் குமார்
பீகார் அரசியலைப் பொறுத்தவரை மாநிலங்களைப் போல அவ்வளவு எளிதாக சமாளித்து விட முடியாது. சிக்கலான அரசியலமைப்புகள், சாதி கட்டுமானங்கள் ஆகியவற்றையும் தாண்டி பத்தாவது முறையாக முதலமைச்சராகி இருக்கிறார். இதுவரை 19 ஆண்டுகள் பிகாரின் முதல்வராக இருந்திருக்கிறார் நிதீஷ் குமார். இந்திய அரசியலில் மிகவும் சிக்கலான பீஹார் அரசியலை சமாளித்து 20 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருக்கும் நிதீஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வராக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இந்திய அரசியலிலேயே கூட்டணிகளை மாற்றிக் கொண்டே ஆட்சியில் இருப்பது என்ற விமர்சனத்தோடு, கூட்டணி எதுவாக இருந்தாலும் நிதீஷ் குமார் தான் முதலமைச்சர் என்கிற அதிஷ்டத்தையும் ஒரே நேரத்தில் பெற்றவர்.
பிகார் அரசியல்
அவர் இருக்கும் கூட்டணி ஆட்சியமைக்கும், அந்த கூட்டணியின் முதல்வராக நிதிஷ் பீகார் இருப்பார் என்பது பீகாரின் எழுதப்படாத விதி என்று கூட சொல்லலாம். பிகார் அரசியலில் நிதிஷ் குமாரின் வரவு எப்படி இருந்தது? அவர் தொடர்ந்து முதல்வராக இருப்பது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம். 2000 மார்ச் 3ஆம் தேதி நிதீஷ் முதன்முறையாக முதல்வரானார். ஆனால் அந்த ஆட்சி வெறும் 7 நாட்களே நீடித்தது. அதன்பிறகு தான் அரசியல் கணக்குகளில் அவர் வல்லுநராக மாறும் பயணம் தொடங்கியது.
கூட்டணி அரசியல்
நிதீஷ் குமாரின் அரசியல் வரலாற்றை பார்க்கும்போது, ஒரே வரியில் சொல்லலாம். ஆட்சி எதுவாக இருந்தாலும், நிதீஷ் அதன் முதல்வராக இருந்தார்' என்பதே. அவர் பாஜக-என்டிஏ கூட்டணியிலும் இருந்தார். வர் மகாகத்பந்தன்-காங்கிரஸ்-ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனும் இருந்தார். இருந்த கூட்டணிகளை விட்டு விலகியதும் உண்டு. திரும்ப அதே கூட்டணிக்குள் சென்று முதல்வரானதும் உண்டு. இது எல்லாம் தற்செயலான மாற்றங்கள் அல்ல. ஒவ்வொரு முறையும் பிகார் அரசியலின் சமூக-ஜாதி கணக்குகள், பிராந்திய வாக்கு வங்கி, கூட்டணி சக்தி ஆகியவற்றை கணக்கிட்டுத் தான் அவர் காய்களை நகர்த்தி வந்தார்.
கூட்டணி மாற்றம்
2005 - 2010 முதல் பாஜக கூட்டணியுடன் நிலையான முதல் ஆட்சி, 2010 -2014ல் மீண்டும் என்டிஏ, 2014 தேர்தலுக்கு பிறகு ராஜினாமா, 2015ல்மகாகத்பந்தனுடன் மீண்டும் ஆட்சி, 2017ல் மகாகத்பந்தனை விட்டு வெளியேறி பாஜகவுடன் கூட்டணி, 2020ல் என்டிஏ உடன் கூட்டணி, 2022ல் மீண்டும் பாஜகவை விட்டு மகாகத்பந்தன், 2024ல் அதையும் விட்டு மீண்டும் என்டிஏ, 2025ல் பத்தாவது முறையாக என்டிஏ கூட்டணியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் என நிதிஷ் பலமுறை யூடர்ன் செய்திருக்கிறார்.
அரசியல் கணக்குகள்
இப்படி பலமுறை கூட்டணி தாவி இருந்தாலும், எப்படி அவரால் தொடர்ந்து ஜெயிக்க முடிகிறது என்ற கேள்வி எழலாம். நிதீஷ் குமாரின் ஆட்சிக்காலம் முழுவதும் நல்லாட்சி, சட்ட ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, கல்வி-அருகு சாலைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் முன்னேற்றங்கள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பிகார் ஒருகாலத்தில் குற்றச்செயல்களின் தலைநகர் என்று அழைக்கப்பட்ட நிலையில், நிதீஷ் அந்தப் அவச்சொல்லை நீக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் கொண்டு வந்த சைக்கிள் திட்டம், பெண்கள் கல்விக்கான ஊக்குவிப்புகள், நலத்திட்டங்கள் ஆகியவை மக்களிடையே அவருக்கு தனி செல்வாக்கை உருவாக்கியது.
சாதுர்யம்
நிதீஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வர் பதவியேற்றிருப்பது, வெறும் பதவியை மீண்டும் பிடித்திருப்பது மட்டுமல்ல. அவரின் அரசியல் அனுபவமும், சூழ்நிலைகளை சமாளிக்கும் திறனும், கூட்டணிகளை தன் வசமாக்கும் கணக்கு, இந்திய அரசியலில் வேறு எவருக்கும் இல்லாத அளவுக்கு வித்தியாசமானது. பிகார் அரசியலில் நிறைய தலைவர்கள் உருவானார்கள். நிறைய கூட்டணிகள் உருவாகி மறைந்து போனது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் பிகாரின் அரசியலை தனது கைவிரல்களுக்கு வைத்திருக்கும் ஒரே பெயர் என்றால் அது நிதீஷ் குமார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications