கிறிஸ்தவம், இஸ்லாமில் தீண்டாமை இல்லை.. மதம் மாறினால் பட்டியலின அந்தஸ்து தேவையில்லை- மத்திய அரசு
டெல்லி: இந்து மதத்தில் இருப்பதைபோல் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களில் ஜாதிய தீண்டாமை இல்லை என்பதால், மதம் மாறிய தலித்துகளுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கும் எஸ்.சி. எனப்படும் பட்டியலின அந்தஸ்து வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மதம் மாறிய பட்டியலின மக்கள் எஸ்.சி. இடஒதுக்கீட்டு பயன்களை அனுபவிக்கும் வகையில் எஸ்.சி.யாக அவர்களை வகைப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசு பதில் மனு
இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா மற்றும் விக்ரம் நாத் ஆகியோரது அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசிடம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர். இதனை அடுத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்து உள்ளது.

அடக்குமுறைகள்
அந்த மனுவில், "பல நூறு ஆண்டுகளாக இந்து மதத்தில் அடக்குமுறைகள் இருந்து வந்தன. ஆனால், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களில் அந்த அடக்குமுறைகள் இருந்ததற்கான ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே அவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான அந்தஸ்து வழங்குவது அவசியம் இல்லை." என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அரசியலமைப்பு ஆணை
கடந்த 1950 வது ஆண்டில் பட்டியல் சாதிகள் தொடர்பான அரசியலமைப்பு ஆணையில், இந்து, பவுத்தம் மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்தவர்களுக்கே பட்டியல் சாதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே இது அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு உள்ளது.

இடஒதுக்கீடு
மேலும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27% இடஒதுக்கீடுக்கு தகுதிபெற்றவர்கள் என்று தெரிவித்து இருக்கும் மத்திய அரசு, மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கல்வி உதவித்தொகையும் அவர்களுக்கு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளது.

பல்வேறு பலன்கள்
அத்துடன் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதியத்தால் நிர்வகிக்கப்படும் இதர வருவாய் ஈட்டும் செயல்பாடுகள் உட்பட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களின் பலன் அடைவதற்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தகுதியுடையவர்கள் என தனது பதில் மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டு இருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications