டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்ச்சைக்குரிய கருத்துகளை அட்மின் கூட இனி பதிவு செய்ய முடியாது... ட்விட்டர் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Twitter new rule | சர்ச்சைக்குரிய கருத்துகளை இனி பதிவு செய்ய முடியாது: ட்விட்டர் தகவல்- வீடியோ

    டெல்லி: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிடுவதை தடுக்க அந்த நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

    மோதல்களை உருவாக்கும் கருத்துகளையும், ஆடியோ, வீடியோ போன்றவற்றை நீக்க அரசுகள் , சமூக வலைதளங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், பரபரப்பான சூழ்நிலைகளில் பயனாளர் அனுமதியின்றி நீக்கம் செய்யப்படுகிறது.

    No longer post controversial comments On Twitter

    இந்தநிலையில், ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின் படி சர்ச்சைக்குரிய ட்விட்டுகள், பயனாளர்களுக்கு தெரியாமல் நீக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரிவினைகளை தூண்டும் விதமாக வெளியிடப்படும் ட்விட்டுகளை பயனாளர்கள் புகார்கள் செய்தால் அதன் மீது ட்விட்டர் தொழில்நுட்ப குழுவினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஒரு லட்சம் பாலோயர்களுக்கு மேல் உள்ள கணக்குகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாள்தோறும் தனது ட்விட்டர் பதிவால் உலக அரங்கில் சலசலப்பை கிளப்பும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை குறி வைத்தே ட்விட்டர் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளாதாக கூறப்படுகிறது.

    சரச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் பிரபலங்கள் எதிர்ப்பு கிளம்பும் போது அதனை தனது அட்மின் பதிவிட்டதாக கூறுவது வழக்கம். இனிமேல் அட்மினும் பதிவிட முடியாத வகையில் ட்விட்டர் விதிமுறைகளை மாற்றியுள்ளது. இதே போல பேஸ்புக் நிறுவனமும் சில விதிமுறைகளை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் செயலார் ஹெச். ராஜா தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்படும் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த அவர், இதுபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என பதிவிட்டு இருந்தார்.

    ஹெச். ராஜாவின் இந்த பதிவு தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது அட்மின் தவறாக பதிவிட்டு விட்டார் என்று விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Twitter has announced new regulations that will prevent it from posting controversial comments
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X