சிக்னல்ல மடக்கிட்டாங்களா.. லைசன்ஸ், வண்டி ஆர்சி புக் இல்லையா? "பார்த்தா"வுக்கு போன் செய்ய வேண்டாம்!
டெல்லி: வண்டி ஓட்டும் போது போக்குவரத்து போலீஸார் உங்களை மடக்கி வண்டியின் ஆர்சி புக்கையும் லைசன்ஸையும் கேட்கிறாரகளா, இனி திருதிரு என முழிக்க தேவையில்லை!
1989 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு புத்தகம் (டிரைவிங் லைசன்ஸ் அல்லது ஆர்சி புக்) ஆகியவற்றை வாகன ஓட்டிகள் எப்போதும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த இரு ஆவணங்களையும் mParivahan என்ற மொபைல் ஆப்பில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தேவையான நேரங்களில் போக்குவரத்து அதிகாரிகள் கேட்டால் இதை காட்டிக் கொள்ளலாம்.

டாக்குமென்டுகள்
இது போல் காட்டப்படும் டாக்குமென்டுகளை எந்த போலீஸாரும் நிராகரிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம் பரிவாஹன் ஆப்பில் விவரங்களை சேர்ப்பது எப்படி என பார்க்கலாம். ரொம்ப எளிதான வழிகளை பின்பற்றி செய்யலாம்.

கூகுள் பிளே ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எம்பரிவாஹன் ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளவும். பிறகு எம் பரிவாஹன் ஆப்பை ஓபன் செய்து மொபைல் எண்ணை பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இந்த செயல்முறையின் போது உங்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பாஸ்வேர்டு (OTP) வரும்.

டிரைவிங் லைசன்ஸ்
இதை கொடுத்து பதிவை முடிக்க வேண்டும். அப்போது இரண்டு தேர்வுகளை அணுக வேண்டும் என வரும். ஒன்று டிஎல்- டிரைவிங் லைசன்ஸ், இன்னொன்று ரெஜிஸ்டிரேஷன் காப்பி எனப்படும் ஆர்சி புக். டிரைவிங் லைசன்ஸ் நம்பரை கொடுக்க வேண்டும். பின்னர் உங்களின் விர்ச்சுவல் டிஎல்லை உருவாக்க ஆட் டு மை டேஷ்போர்டு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

டேஷ்போர்டு
பிறகு உங்கள் பிறந்த தேதி, வருடம், மாதம் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இதுவும் உங்கள் டிஎல் ஆப்பின் டேஷ்போர்டில் சேர்க்கப்படும். உங்கள் லைசன்ஸை பார்க்க மேற்புத்தில் உள்ள டேஷ்போர்டு பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் உங்கள் டிஎல் பற்றிய முழு விவரங்களும் உடன் ஒரு கியூஆர் கோடும் வரும். அதை ஸ்கேன் செய்தால் அந்த ஆவணத்தின் அனைத்து தகவல்களும் போக்குவரத்து காவல் துறையினருக்கு கிடைக்கும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படம்
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் போக்குவரத்து போலீஸாரிடம் உதயநிதி சிக்குவார். அப்போது பார்த்தாவுக்கு போன் செய்வார். அதாங்க நம்ம சந்தானத்திற்கு போன் செய்வார். அவரும் தம்பி யாரு தெரியுமா என குரலை மாற்றி பேசுவார். அதற்கு அவர் ஒரு பெட்டிக் கடையில் இருந்து பேசுகிறார் என்பதை அறிந்த போலீஸார் இருவரையும் ஸ்டேஷனில் வைத்து நல்ல ட்ரீட்மென்ட் கொடுப்பார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications