டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராணுவ வீரர்கள் போகும் வண்டியை பாருங்க.. பிரதமருக்கு ரூ.8000 கோடியில் விமானம் தேவையா? ராகுல் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: ராணுவ வீரர்களுக்கு புல்லட் ப்ரூப் வாகனம் இல்லை, பிரதமருக்கு ரூ.8000 கோடியில் விமானமா என்று கேள்வி எழுப்பியுள்ளார், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

இது தொடர்பாக ராகுல் காந்தி இன்று வெளியிட்ட ஹிந்தி யிலான ட்விட்டர் பதிவில், நமது ராணுவ வீரர்கள், புல்லட் ப்ரூப் இல்லாத லாரிகளில் பயணம் செய்கிறார்கள், ஆனால் பிரதமருக்கு ரூ.8400 கோடியில், விமானம் வாங்கப்பட்டுள்ளது. இது நியாயமா? இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

லடாக் விவகாரம்... சீனா தன்னை மாற்றிக் கொள்ளாது... அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து!!லடாக் விவகாரம்... சீனா தன்னை மாற்றிக் கொள்ளாது... அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து!!

Non-Bullet Proof Trucks For Army men, Rahul Gandhi slams Modi

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், ராணுவ வீரர்கள் பேசுவது போன்ற ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து யாரும் உறுதிப்படுத்தவில்லை என்றபோதிலும், அந்த வீடியோவில் பேசும் வீரர்கள் கூறுவது இதுதான்: நாம் புல்லட் ப்ரூப் இல்லாத வாகனங்களில் பயணிக்கிறோம். சிலர் புல்லட் ப்ரூப் வாகனங்களில் செல்கிறார்கள். நாம் வாழ்க்கையை வீணடிக்கிறோம். இவ்வாறு ஹிந்தியில் பேசுவது கேட்கிறது.

இது எங்கே ஷூட் செய்யப்பட்டது என்ற விவரத்தை, டுவிட்டர் பதிவில் வெளியிடவில்லை ராகுல் காந்தி.

பிரதமர் மோடி மீதான ராகுல் காந்தியின் விமர்சனம் புதிது இல்லை. கடந்த வாரம் அவர் வெளியிட்ட ட்வீட்டில், ஒரு பக்கம் பிரதமர் மோடி ரூ.8000 கோடிக்கு 2 விமானங்களை வாங்குகிறார். இன்னொரு பக்கம், சீனா நமது எல்லையில் நிற்கிறது. நமது வீரர்கள் குளிர் காலத்தின் கடினமான சூழ்நிலையில், பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

English summary
Congress leader Rahul Gandhi this morning yet again targeted Prime Minister Narendra Modi and accused the government of spending ₹ 8,400 crore for special aircraft while neglecting safety of soldiers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X