கூட்டணிக்கு அழைத்த மம்தாவை கிண்டல் செய்த சவுத்ரி.. இவ்வளவு நடந்தும் காங்கிரஸ் இன்னும் மாறலியே
டெல்லி: காங்கிரஸ் குறித்து பைத்தியக்காரத்தனமாக கருத்து தெரிவித்த யாருக்கும் பதில் சொல்லத்தேவையில்லை என மம்தா பானர்ஜிக்கு பதிலளித்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.
நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் ஐந்து மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
இதனால் காங்கிரஸ் கட்சியை அடுத்து நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து பணியாற்றலாம் என மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மம்தா பானர்ஜி
காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024ஆம் ஆண்டு நாம் அனைவரும் இணைந்து போட்டியிடலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த தேர்தல் முவுகள் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலின் தலைவிதியை நிர்ணயம் செய்யாது என்றும் அப்போது மக்களின் மனநிலைமை மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்தால் அது பாஜகவிற்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி அதனுடைய நம்பிக்கையை இழந்துவிட்டது. இனியும் காங்கிரஸ் கட்சியை நம்பி இருக்க முடியாது என்ற கருத்தையும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மம்தாவின் கருத்துக்கு தொடர்ந்து எதிர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எதிர்ப்பு
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆர்.சவுத்ரி இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, ''மம்தா பானர்ஜி கூறுவது பைத்தியக்காரத்தனமானது. அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் 700 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்.

பிஜேபி ஏஜெண்ட்
மம்தா பானர்ஜியிடம் எவ்வளவு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். எதிர்கட்சிகளின் மொத்த வாக்குகளில் காங்கிரஸ் கட்சி 20% வாக்குகள் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இது தீதியிடம் இருக்கிறது. பிஜேபியை மகிழ்விப்பதற்காக, அவர்களின் ஏஜெண்டாக செயல்படுவதற்காக காங்கிரஸ் கட்சி குறித்து இதுபோன்ற விஷயங்களைப் பேசி வருகிறார்'' என்று சவுத்ரி கூறியுள்ளார்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications