ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மீண்டும் வேகம் எடுத்து இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமின் மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேர்தலை பரபரப்பில் இருக்கும் இவருக்கு எதிராக அமலாக்கத்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இது கார்த்தி சிதம்பரத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

என்ன வழக்கு
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். இது தொடர்பான வழக்கில் ப. சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

வழக்கு பதிவு
2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. அதேபோல் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் பல முறை விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

முடக்கியது
இந்த நிலையில்தான் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.தேர்தல் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கபபட்டு இருப்பது கார்த்தி சிதம்பரத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications