ஒடிசா ரெயில் விபத்து.. 207 பேர் பலி, 900 பேர் படுகாயம்..மாநிலம் முழுவதும் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
டெல்லி: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியது... இந்த கோரமான விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 900 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு 7 மணி அளவில் இந்த ரயில் வந்து கொண்டு இருந்தது.
தடம்புரண்டது: அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் திடீரென தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளம் மீது விழுந்தது. இந்த விபத்து நடந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், அதாவது, இரவு 7.20 மணிக்கு அந்த வழியாக கொல்கத்தா ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்தது. தண்டவாளத்தில் கிடந்த பெங்களூரு ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் ஒவ்வொன்றாக தடம் புரண்டன. இதில் சில பெட்டிகள் அருகில் 3வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில சரக்கு ரயிலும் தடம் புரண்டது.. இரவு நேரம் என்பதாலும், வனப்பகுதி என்பதாலும் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்கிழக்கு ரயில்வே சார்பில் மீட்பு ரயில் உடனே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றது.

சரக்கு ரயில்: சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதால் கோரமண்டல் விரைவு ரயிலில் சுமார் 7 பெட்டிகள் தடம் புரண்டிருக்கலாம் என்கிறார்கள்.. காட்டுப்பகுதிக்குள் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரண பணியில் தாமதம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முதலில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள பாலசோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிய நிலையில் பல பெட்டிகள் தடம் புரண்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது... ஆனால், 2 ரயில்களும் விபத்தில் சிக்கியதால் இது கோர விபத்தாக மாறிவிட்டது.. இதுவரை 207 உடல்களை மீட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. மேலும் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 900ஆக அதிகரித்துள்ளது.
12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. ஆனால், சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்துள்ளது. ஆனால், அது பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.
பத்ராக் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுவடைந்திருக்கிறது. ஆனால் ரயிலுக்கு என்ன ஆனது என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதன் பின்னர்தார் பல்சோர் மாவட்டம் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே இந்த ரயில் தடம்புரண்டுள்ளது. இந்த ரயிலின் B2 முதல் B9 வரை உள்ள பெட்டிகள் மற்றும், A1, A2 பெட்டிகள் என 10 பெட்டிகள் மொத்தமாக தடம்புரண்டு எதிர் தண்டவாளத்தில் விழுந்திருக்கிறது.
காயமடைந்தவர்கள் அங்கே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏசி பெட்டிகளில் பயணித்தவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது..
அஞ்சப்படுகிறது: சுமார் 15 பேட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்னும் முடியவில்லை. மீட்பு தொடரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 207பேர் உயிரிழந்ததாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.
2 பயணியர் ரயில்களிலும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இரவு நேரம் என்பதால், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பலியானர்களின் உடல்கள் மீ்ட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரெயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதையடுத்து ஒடிசாவில் இன்று அரசு சார்பில் நடைபெற இருந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம்: காயமடைந்த 800க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன. 30 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 700 பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மம்தா: இந்நிலையில், விபத்து நடந்த இடத்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வர உள்ளார்.. இதுகுறித்து அம்மாநில பெண் ஒருவர் சொல்லும்போது, "நாங்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துள்ளோம். எங்கள் முதல்வர் (மம்தா பானர்ஜி) இங்கு வருகிறார்.. அவர் காரக்பூரிலிருந்து அதிகாரிகளையும், மருத்துவர்களையும், ஆம்புலன்சையும் அனுப்பி வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்..
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications