ஓமிக்ரான் ஆதிக்கம்.. இந்திய விமான நிலையங்களில் என்னென்ன கட்டுப்பாடுகள்?.. முழு விவரம் இதோ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக நாடுகளை பயமுறுத்தி வரும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 570-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 19 மாநிலங்களில் ஒமிக்ரான் கால் பதித்துள்ளது.

Recommended Video

    #BREAKING இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு 653ஆக உயர்வு!

    டெல்லியில் அதிகபட்சமாக 142 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 141, கேரளா 57, குஜராத் 49, ராஜஸ்தான் 43 மற்றும் தெலுங்கானா 41 என ஒமிக்ரான் பாதிப்பில் மாநிலங்கள் போட்டி போட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் தலைநகர் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா வரை பல மாநிலங்கள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதனை பின்வருமாறு காண்போம்.

     தலைநகர் டெல்லி:

    தலைநகர் டெல்லி:

    நாட்டிலேயே மிக அதிகமான ஒமிக்ரான் உள்ளது டெல்லியில்தான். டெல்லி விமான நிலையம்தான் நாட்டுக்கே மையப்புள்ளி என்பதால் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் டெல்லிக்கு பறந்து வரும் மக்களுக்கு பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு சீரற்ற மாதிரி சேகரிப்பு செய்யப்படும். மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின்னரே பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்படும்.

    கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்ட பயணிகள் 10 நாட்களுக்கு வீட்டிலோ அல்லது கொரோனா சிகிச்சை மையங்களிலோ தனிமைப்படுத்தப்படுவார்கள். சர்வதேச பயணிகள், திட்டமிடப்பட்ட பயணத்திற்கு முன் ஆன்லைன் ஏர் சுவிதா போர்ட்டலில் சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா நெகட்டிவ் என்ற RT-PCR அறிக்கையையும் பதிவேற்ற வேண்டும். பயணத்துக்கு 72 மணி நேரத்திற்குள் முன்னர் சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

    கொரோனா ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மாதிரிகளை சமர்ப்பிப்பார்கள். கொரோனா நெகட்டிவ் இருந்தாலும் அவர்கள் கட்டாயம் 7 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். 8 வது நாளில் மீண்டும் சோதனை செய்யப்படும். அப்போது நெகட்டிவ் இருந்தாலும் அடுத்த 7 நாட்கள் கண்காணிப்பு செய்யப்படுவார்கள். கொரோனா ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் 14 நாட்களுக்கு தங்களது உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும்.

     மகாராஷ்டிரா:

    மகாராஷ்டிரா:

    அதிக ஆபத்துள்ள சர்வதேச விமானிகள் மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்தவுடன் RT-PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நெகட்டிவ் உள்ளவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். 8-வது நாளில் மீண்டும் சோதனை நடத்தப்படும். கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டால் உடன்டியாக கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். உள்நாட்டு விமானப் பயணிகளைப் பொறுத்தவரை, பயணிகள் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது 72 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டிய RT-PCR கொரோனா நெகட்டிவ் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.

     மகாராஷ்டிரா தலைநகர் மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை:

    மும்பையில் வசிக்கும் துபாயில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டால் வந்தவுடன் RT-PCR சோதனை தேவைப்படாது. மும்பையைத் தவிர மற்ற நகரங்களில் வசிக்கும் பயணிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கும். அவர்கள் பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

     மேற்கு வங்காளம்:-

    மேற்கு வங்காளம்:-

    பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் என்ற RT-PCR சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். ஓமிக்ரான் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து மாநிலத்திற்கு வருபவர்கள் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

     கர்நாடகா:-

    கர்நாடகா:-

    மாநிலத்திற்கு வரும் சர்வதேச விமானிகள் கட்டாயமாக RT-PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். மற்றும் 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். பாசிட்டிவ் இருந்தால் அது ஓமிக்ரானா என்பதை அறிய அவர்களின் மாதிரி மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும். ஓமிக்ரான் இல்லை என்று தெரிய வந்தால்தான் தங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் விருப்பப்படி அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

     ஜம்மு காஷ்மீர்:-

    ஜம்மு காஷ்மீர்:-

    காஷ்மீருக்கு செல்லும் வெளிநாட்டினர் விமான நிலையத்தில் RT-PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஓமிக்ரான் ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நெகட்டிவ் இருந்தாலும் அவர்கள் 7 நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். 8- ம் நாள் மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளும் குறைந்தது 2 வாரங்களுக்கு தங்களைக் கவனமாகக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

     தமிழ்நாடு:

    தமிழ்நாடு:

    இதேபோல் இங்கு குறிப்பிடாத மற்ற மாநிலங்களின் விமான நிலையங்கலிலும் மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள்தான் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவவர்களுக்கு RT-PCR சோதனை மற்றும் 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று தமிழக அரசும் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+