நிலைமை கையை மீறி போய்விட்டது..? எல்லோருக்கும் Work From Home.. மோடி அறிவிப்பால் அச்சம்!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் வொர்க் ஃப்ரம் ஹோம் காலம் காலமாக இருந்தாலும், கோவிட் தொற்றுக்கு பின்பு லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் தான் பிரபலமானது. இந்த நிலையில் பிரதமர் மோடி திடீரென அனைத்து ஊழியர்களையும், நிறுவனங்களையும் வொர்க் ப்ரம் ஹோம் முறைக்கு மாற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் உலகளாவிய பொருளாதார சூழலையே தலைகீழாக புரட்டிப்போட தொடங்கியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக எரிபொருள் இறக்குமதியை அதிகமாக சார்ந்துள்ள இந்தியாவுக்கு கூடுதல் நிதிச் சுமை உருவாகும் அபாயம் நிலவுகிறது.

Modi Work From Home Chennai Modi news Work From Home news Chennai news Modi latest news Work From Home latest news Chennai latest news modi work from home announcement iran us war fuel price hike india modi save foreign exchange work from home for all india postpone gold purchase modi reduce edible oil consumption promote natural farming india swadeshi products call metro carpooling electric vehicles railway parcel movement india foreign exchange crisis hyderabad bjp event modi speech tamil nadu impact iran war modi restraint on petro products india economic measures west asia conflict

பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசியபோது, மத்திய கிழக்கில் நடந்து வரும் ஈரான் - அமெரிக்க மோதல் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதை ஒப்புக்கொண்டார்.

இந்தச் சூழலில் இந்தியா வெளிநாட்டு செலவுகளை "எப்படியாவது" குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் அவர் பேசிய இந்த உரை, தற்போதைய சர்வதேச நெருக்கடியின் தாக்கத்தை இந்தியாவில் பெரிய அளவில் பாதிக்க துவங்கியுள்ளதை காட்டுகிறது. எல்லோருக்கும் Work From Home அளிக்க வேண்டும் என மோடி சொல்வதற்கான காரணம் என்ன?

எரிபொருள் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம்

பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்களை தேவைக்கு ஏற்றவாறு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்த நடவடிக்கை அன்னிய செலாவணி செலவை சேமிப்பதோடு, போர் காரணமாக ஏற்படும் தாக்கத்தையும் குறைக்க உதவும் என்று அவர் விளக்கினார். பொதுமக்கள் தங்கள் அன்றாடப் பயன்பாட்டில் சிறு மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் நாட்டுக்கு பெரும் உதவியாக இருக்க முடியும் என்பதை தான் மக்களுக்கு புரியும் வகையில் எளிய மொழியில் தெரிவித்தார்.

ஆனால் மோடியின் இந்த அறிவிப்புக்கு பின்னால் நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் ஈரான் - அமெரிக்க போர் 3வது மாதத்திற்குள் நுழைந்துள்ளது. இன்னும் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை சீராகவில்லை, இந்தியாவில் இருக்கும் சேமிப்பு இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது நிலைமை கையைமீறி போய்விட்டதால் எரிபொருள், டாலர் இருப்பையும் சேமிக்க ஒரே வழி லாக்டவுன் தான்.

அன்னிய செலாவணியை சேமிக்கும் வழிகள்

அன்னிய செலாவணி சேமிப்பது தற்போது நாட்டின் முக்கிய தேவை என்றும் மோடி வலியுறுத்தினார். இதற்காக மக்கள் தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு பயணங்களையும் ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மோடி கொடுத்த தீர்வுகள்

பிரதமர் மோடி, நகரங்களில் இருக்கும் மக்களை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவது, கார் பூலிங் (பலர் ஒரு காரில் பயணம்), எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், ரயில் சேவையை பார்சல் போக்குவரத்துக்கு பயன்படுத்துதல், ஒரு ஆண்டுக்கு வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்றவற்றை ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தினார்.

இதர முக்கிய ஐடியா

வெளிநாட்டு செலவை சேமிக்க சமையல் எண்ணெய் நுகர்வை குறைப்பது, ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது, சொந்த நாட்டு (சுவதேசி) பொருட்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றையும் மோடி பரிந்துரைத்தார்.

மேலே கூறப்பட்ட அனைத்தும் பொருட்களையும் இந்தியா அதிகளவில் வெளிநாட்டில் இருந்து வாங்கி வருகிறது. இதனால் டாலர் இருப்பை சேமிக்க இதையெல்லாம் குறைக்க வேண்டும் என மோடி அறிவுறுத்துகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+